News August 9, 2025

இனி Minimum Balance ₹50,000.. அதிர்ச்சி கொடுத்த ICICI

image

புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு ICICI அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச மாதாந்தர இருப்புத் தொகையை (Avg.Minimum Balance) நகர்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ₹50,000, சிறு நகரங்களுக்கு ₹25,000, கிராமப்புற பகுதிகளுக்கு ₹10,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை ஆக.1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், ஏற்கெனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய AMB தொடரும்.

News August 9, 2025

தாம்பரத்தில் புதிய GH-யை திறந்து வைத்த CM ஸ்டாலின்

image

சென்னை, தாம்பரத்தில் ₹110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன GH-யை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். அத்துடன் ₹7.24 கோடி கட்டப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஹாஸ்பிடல், புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். இதனால், சென்னையின் புறநகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

News August 9, 2025

ப்ரீ புக்கிங்கில் ரெக்கார்ட் படைக்கும் ‘கூலி’

image

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாக இருக்கும் ‘கூலி’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. தற்போது வரை மட்டுமே ப்ரீ புக்கிங்கிலேயே படம் ₹40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் படத்துக்கான புக்கிங் ஓப்பன் ஆகாத நிலையில் வரும் நாள்களில் இது இன்னும் அதிகரிக்கலாம். ‘கூலி’ கோலிவுட்டின் முதல் ₹1,000 கோடி வசூலை அள்ளுமா?

News August 9, 2025

அஜித் வழக்கில் நிகிதா பொய் புகார் என CBI சந்தேகம்!

image

திருபுவனம் கோயில் காவலாளி அஜித் போலீஸ் கஸ்டடி மரண வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை CBI தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், காரில் வைத்திருந்த நகை மாயமானதாக நிகிதா அளித்த புகார் பொய்யாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கோயில் பார்க்கிங்கை விட்டு நிகிதாவின் கார் வெளியே செல்லவே இல்லை எனவும், 2 நிமிடங்களில் நிகிதா காரை எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News August 9, 2025

Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

image

1. இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம்?
2. குளிர் பானங்களின் PH மதிப்பு என்ன?
3. தமிழக அரசால் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்ற அமைப்பு எப்பொழுது துவக்கப்பட்டது?
4. ‘நிலா நிலா ஓடி வா’ என்ற குழந்தைகள் பாடலை இயற்றியவர்?
5. உலகின் முதல் அசையும் படம்(Movie) எது?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்

News August 9, 2025

விளம்பரம் தேடும் திமுக அரசு: ஜான் பாண்டியன் தாக்கு

image

திமுக அரசு அறிவித்துள்ள மாநில கல்விக் கொள்கை வெறும் விளம்பர நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக ஜான் பாண்டியன் விமர்சித்துள்ளார். இருமொழிக் கொள்கை, நீட் தேர்வு எதிர்ப்பு போன்றவை தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக, அரசியல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. திமுக அரசு விளம்பரங்களில் நேரத்தை வீணடிக்காமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

வீட்டில் பசங்க அதிகமாக கார்ட்டூன் பாக்குறாங்களா?

image

பசங்க கார்ட்டூன் தானே பார்க்கிறார்கள் என பெற்றோர்கள் விளையாட்டாக இருந்துவிடக் கூடாது. பெங்களூருவில் ஜப்பானிய சீரியலான ‘Death note’-க்கு அடிமையான சிறுவன் அதன் தாக்கத்தால் நரகத்துக்கு செல்வதாக லெட்டர் எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளான். பள்ளி மாணவன் ஒருவனுக்கு நரகத்தின் புத்தகம் கிடைக்கவே, அதன்மூலம் அவன் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற சூப்பர் பவரை பெறுவதே அந்த கார்ட்டூனின் கதை.

News August 9, 2025

கவர்னர் இல.கணேசனுக்கு ICU-வில் சிகிச்சை

image

வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயங்களுடன் நேற்று அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நாகாலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு ICU-வில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரம்பியல் மற்றும் இதயவியல் டாக்டர்கள் கொண்ட சிறப்புக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக Ex தலைவரான இல.கணேசன் உடல்நிலை குறித்து மத்திய அரசு சார்பில் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

News August 9, 2025

‘ராமதாஸுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் கடவுளே! ‘

image

மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. தற்போது பொதுக்குழுவில் பங்கேற்க வந்த பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது. இவை அனைத்தும் வீடியோவாகவும் பதிவு செய்யப்படுகிறது. இதற்கிடையில், ‘பொதுக்குழு நடக்கும் இடத்தில் ராமதாஸுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் கடவுளே!’ என்று பாமகவினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

News August 9, 2025

NEP விதி; SEP மதி: அன்பில் மகேஸ் விளக்கம்

image

தேசிய கல்விக் கொள்கை(NEP) விதி, ஆனால் மாநிலக் கல்விக் கொள்கை(SEP) மதி என அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். NEP-யை காப்பி அடித்து SEP உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், ஒரு சில திட்டங்களின் சாயல்கள் ஒன்றாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் வேறு என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும், பிற்போக்குத்தனமான செயல்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை என மறுத்துள்ளார்.

error: Content is protected !!