India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகரும், TVK தலைவருமான விஜய்யின் சொத்து மதிப்பு சுமார் ₹600 கோடி என TOI தெரிவித்துள்ளது. நீலாங்கரை சொகுசு பங்களா, 10 நிறுவனங்களின் விளம்பர தூதர், ரோல்ஸ் ராய்ஸ், BMW X5 & X6, Audi A8 L, Mercedes Benz GLA உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களும் இதில் அடங்கும். குறிப்பாக ஆண்டுக்கு சராசரியாக ₹100 முதல் ₹120 கோடி வரை அவர் சினிமா மூலம் வருமானம் ஈட்டுவதாகவும் TOI செய்தி கூறுகிறது. அடேங்கப்பா..!
காலை 11:30 மணிக்கு கேட்கப்பட்ட <<17359267>>கேள்விகளுக்கான <<>>பதில்கள்:
1. 1975
2. தாவரங்களின் இலைகள், தண்டுகள் & பாசிகளில் காணப்படுகிறது
3. கலீலியோ கலிலி (சில இடங்களில் ஐசக் நியூட்டனும் குறிப்பிடப்படுகிறார்)
4. செங்காந்தள்
5. மைத்துனர்.
ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி நாடு முழுதும் பயணிக்கும் புதிய, ‘FASTAG’ நடைமுறை வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த பாஸ், ஆக்டிவேட் செய்யப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு (அ) 200 முறை பயணிக்கலாம். வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கான இத்திட்டத்தில் கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் இந்த பாஸை பயன்படுத்தலாம். வாகன ஓட்டிகள் இந்த வருடாந்திர பாஸை ‘<
தலைநகரில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இது திமுக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தலைநகரிலேயே இருக்கும் CM ஸ்டாலின், போராட்டக்காரர்களை ஏன் சந்திக்கவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
RR அணியை விட்டு சாம்சன் வெளியேற இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான் காரணம் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 2025 தொடரில் ஓப்பனராக களமிறங்கி வைபவ் அசத்தியதால், வரும் ஆண்டுகளில் அவரை ஓப்பனராக களமிறக்க RR முடிவு செய்துள்ளதாம். மற்றொரு இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஓப்பனராக இருக்கும் நிலையில், இது சஞ்சுவுக்கு நெருக்கடி உருவாக்கியதன் காரணமாகவே அவர் அணியை விட்டு விலகுவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
✪தூய்மை <<17359241>>பணியாளர்களின் <<>>போராட்டம்.. 2 நாளில் தீர்வு: அமைச்சர் KN நேரு
✪பள்ளி மாணவிகளுக்கான ‘<<17358489>>அகல் விளக்கு<<>>’ திட்டம்.. தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்
✪MGR-ஐ விமர்சித்த <<17358793>>திருமாவளவன்<<>>: எச்சரிக்கும் OPS
✪கென்யா <<17358600>>பஸ்<<>> விபத்து.. 25 பேர் பலி
✪ஆசிய <<17358808>>அலைச்சறுக்கு <<>>சாம்பியன்ஷிப்.. தமிழக வீரர் சாதனை
பங்குச்சந்தைகளின் தொடர் சரிவு பல லட்சம் கோடிகளை இழக்க வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக கடந்த 8-ம் தேதி 79,858 புள்ளிகளுக்கு Sensex சென்றது. Nifty 1% சரிந்து 24,363 புள்ளிகளில் நிறைவடைந்தது. USA-வின் வரியால் ஏற்பட்டுள்ள இந்த சரிவில் இருந்து மீளாவிட்டால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை உலக நிறுவனங்களின் பக்கம் செல்வதோடு, பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கேள்விகள்:
1. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டா, எந்த ஆண்டில் ஏவப்பட்டது?
2. குளோரோபில் எதில் காணப்படுகிறது?
3. இயற்பியலின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?
4. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
5. உங்கள் மகளுடைய கணவரின் மாமியார், என் தந்தையின் மகள் என்றால், நான் உங்களுக்கு என்ன உறவு?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்
முதல்முறையாக தந்தையாகும் ஆண்களின் வயது கணிசமாக அதிகரித்துள்ளதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தொழில் முன்னேற்றம், உயர்கல்வி, பொருளாதார நிலை போன்ற காரணங்களால் ஆண்கள் குடும்பத்தை ஆரம்பிக்கும் முடிவை தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது 41% பேர் 35 வயதுக்கு மேல் முதல்முறையாக குழந்தை பெற்றுக்கொள்வது தெரியவந்துள்ளது. அதேநேரம் ஆண்களின் இந்த முடிவில் சில சவால்களும் இருக்கின்றன.
வரும் <<17334045>>15, 16, 17-ம் தேதிகளில்<<>> பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாகும். இதனால், சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரயில், பஸ்களில் புக் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட எழும்பூர் – செங்கோட்டை, <
Sorry, no posts matched your criteria.