News August 11, 2025

US செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் இஸ்ரோ

image

அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் 2 மாதங்களில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். 6,500 கிலோ எடையுள்ள பிளாக்-2 ப்ளூபேர்டு செயற்கைக்கோள் 2 மாதங்களில் விண்ணில் ஏவப்படும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே ஜூலை 30-ம் தேதி நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த <<17251055>>NISAR <<>>செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்கது.

News August 11, 2025

1M+ டிக்கெட்.. கரியரின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்!

image

இதுவரை எந்தவொரு படத்திற்கும் இல்லாத அளவிற்கு ‘கூலி’ படம் ப்ரீ புக்கிங்கிலேயே 1M+ டிக்கெட்களை விற்றுள்ளது. இன்னும் 3 நாள்கள் இருக்கும் நிலையில், இது இன்னும் அதிகரிக்கக்கூடும். ‘அண்ணாத்த’ படத்தின் தோல்வியின் போது, ரஜினியை கடுமையாக விமர்சித்தவர்களுக்கு தானே தமிழ் சினிமாவின் உச்சம் என நிரூபித்து காட்டிவிட்டார் ரஜினி. கோலிவுட்டின் கனவாக இருக்கும் 1,000 கோடி வசூலை ‘கூலி’ செய்து காட்டுமா?

News August 11, 2025

தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவை: ஸ்டாலின்

image

தேர்தல் ஆணையத்தை பாஜக தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். <<17339036>>பெங்களூருவின் மகாதேவபுராவில்<<>> நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல; திட்டமிட்ட சதி எனவும் அவர் சாடியுள்ளார். டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், ராகுல் காந்தியின் போராட்டத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

இன்று ஒரே நாளில் இந்தியா, பாக்., போர் ஒத்திகை

image

பஹல்காம் தாக்குதலால் பாக்.,- இந்தியா இடையே போர் பதற்றம் தொற்றியது. பாக்., பின்வாங்கியதால் தாக்குதல் கைவிடப்பட்டது. தற்போது அமெரிக்கா சென்றுள்ள பாக்., ராணுவ தளபதி அசிம் முனிர், இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்நிலையில், அரபிக் கடலில் இந்திய கடற்படை இன்று போர் ஒத்திகையில் ஈடுபடுவதாக அறிவித்தது. இதனால் பதறிப்போன பாக்.,கும் இன்றே போர் ஒத்திகையில் ஈடுபடபோவதாக கூறியுள்ளது.

News August 11, 2025

இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

image

இந்தியாவுடனான மோதலுக்கு பின் 2-வது முறையாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே, இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அணு ஆயுதத்தை வைத்து பாதி உலகையே அழித்து விடுவோம் என அசிம் முனிர் எச்சரித்துள்ளார். சிந்து நதியில் இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம் என கூறிய அவர் கட்டிய பின் ஏவுகணைகளால் அதை அழித்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

BREAKING: தங்கம் விலை ₹560 குறைந்தது

image

கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று தலைகீழாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹75,000-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹9,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹-1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News August 11, 2025

EC நீதிமன்றம் அல்ல: ப.சிதம்பரம் காட்டம்

image

புகார்களை கையாள்வதில் தேர்தல் ஆணையம்(EC), நீதிமன்றம் போல் செயல்பட முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தும் பொறுப்புமிக்க நிர்வாக அமைப்புதான் EC என்றும் கூறியுள்ளார். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரை நிராகரிக்க முடியாது என தெரிவித்த அவர் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் EC கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 11, 2025

காசாவில் கொல்லப்பட்ட 5 பத்திரிகையாளர்கள்

image

காசாவின் அல்-ஷிஃபா ஹாஸ்பிடலுக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் அல்ஜசிராவின் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இதில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் அனஸ் அல்-ஷெரிஃப் தீவிரவாதி என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இறப்புக்கு முன்னர் ஷெரிஃப் எழுதிய உருக்கமான கடிதத்தை அவரது நண்பர் X தளத்தில் பகிர்ந்துள்ளார். 22 மாத போரில் இதுவரை 200 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.

News August 11, 2025

யுத்த நாயகனின் ‘The Great Indian Escape’ பாத்துருக்கீங்களா?

image

மரணமடைந்த ‘<<17365976>>யுத்த நாயகன்<<>>’ டிகே பருல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘The Great Indian Escape’ (2019) என்ற படம் வெளிவந்தது. 1971 போரின் போது, பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இவர், சிறையில் இருந்து தப்பிக்கும் போது, தன்னுடன் சேர்த்து 2 இந்திய வீரர்களையும் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தார். விமானப்படை வீரரான டிகே பருல்கர் தனது வீரத்திற்காக வாயு சேனா மற்றும் விஷிஷ்ட் சேனா பதக்கங்களை பெற்றுள்ளார்.

News August 11, 2025

ஆவணி 1ம் தேதி ஓபிஎஸ் சுற்றுப்பயணம்

image

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய OPS, அடுத்தடுத்து அரசியல் ரீதியான நகர்வுகளை எடுத்து வருகிறார். மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என்ற பாஜகவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்ட அவர், ஆவணி 1-ம் தேதி (ஆக.17) முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது, NDA கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து மக்களிடம் விளக்கமளிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

error: Content is protected !!