News August 12, 2025

தேமுதிகவின் கூட்டணி கணக்கு.. சீட் பேரம்..

image

ஜெ.,வுடன் தான் இருக்கும் புகைப்படத்தால் பரபரப்பு தொற்றியதால் அதிமுக கூட்டணியில் தேமுதிக தற்போது இல்லை என்று பிரேமலதா விளக்கமளித்தார். ஆனால், எல்.கே.சுதீஷ் போட்டோவை வெளியிட்டதற்கு பின்னால், அரசியல் காரணம் இல்லாமல் இல்லை. அதிமுகவின் கதவு திறந்து இருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி, திமுக அல்லது தவெகவிடம் கூடுதல் சீட் பேரம் பேசுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.

News August 12, 2025

ஆசிய கோப்பை தொடரில் பாண்ட்யா பங்கேற்பாரா?

image

ஆசிய கோப்பை தொடர் வரும் செப்.09-ம் தேதி UAE-ல் துவங்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் வரும் ஆக.11,12-ம் தேதிகளில் பெங்களூருவில் உள்ள BCCI-ன் சிறப்பு மையத்தில் (COE) 2 நாட்கள் உடற்தகுதி மதிப்பீட்டை அவர் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மதிப்பீட்டின் முடிவே இத்தொடரில் அவர் பங்கேற்பாரா, இல்லையா என்பதை தீர்மானிக்கும்.

News August 12, 2025

விடிய, விடிய மகிழ்ச்சியில் இருந்தேன்: ராமதாஸ்

image

‘வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு’ மகத்தான வெற்றி பெற்றதை நினைத்து விடிய, விடிய மகிழ்ச்சிக் கடலில் நீந்தி திளைத்திருந்தேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரது அறிக்கையில், பெண் கல்வி, மது ஒழிப்பு குறித்து தான் பேசும்போது பெண்கள் அளித்த கைத்தட்டல்கள் ஆள்வோரின் செவிப்பறையில் மோதியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மகளிரை முழுமையாக போற்றி, கொண்டாடிய விழா இதுவெனவும் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

அன்புமணியின் புது ஸ்கெட்ச்: ஒர்க் அவுட் ஆகுமா?

image

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டுமென பாமகவினரை அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில், கடந்தாண்டு எவ்வாறு மதுவிலக்கு வேண்டி கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றினோமோ அதைப்போன்று இந்தாண்டு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 12, 2025

டெல்லியில் இருந்து நற்செய்தி வருகிறது: அண்ணாமலை

image

தமிழகத்திற்கு குறிப்பாக கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் ‘அத்திக்கடவு நாயகன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். அண்மையில் TN விவசாயிகள் டெல்லியில் PM மோடியை சந்தித்து பேசியிருந்தனர். அத்திக்கடவு – அவிநாசி 2-ம் கட்ட திட்டம் (அ) விவசாயிகளுக்கு புதிய திட்டம் குறித்தோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

News August 12, 2025

இறை வழிபாட்டின் முழு பலனை பெற..

image

வீட்டில் தினமும் இஷ்ட தெய்வத்தை வணங்க முடியவில்லை என்றால், அதற்கு கர்ம வினைகளே காரணமாக இருக்கும். இந்த கர்ம வினையை மாற்றி, வீட்டில் பூஜை செய்ய, இந்த 3 விஷயங்களை செய்யுங்கள். வீட்டில் பூஜை செய்யும் போது, இறைவனின் படத்திற்கு கைகளால் பூக்களைத் தூவி, மனதை ஒருநிலைப்படுத்தி, வாய் முழுக்க சத்தமாக கடவுள் மந்திரங்களை சொல்லி பூஜியுங்கள். இது பூஜையின் முழு பலன்களை அடைய செய்யும் என்பது ஐதீகம்.

News August 12, 2025

ராகுல் காந்தி கைதுக்கு கமல் கண்டனம்

image

வெளிப்படைத்தன்மை கேட்டு போராடிய MP-க்களை கைது செய்தது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்கு சமம் என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கைதை கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும் போது, அது வெறும் அரசியல் சச்சரவு அல்ல, சுதந்திரம், கண்ணியம், நீதியின்பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் தார்மீக நெருக்கடி என குறிப்பிட்டுள்ளார்.

News August 12, 2025

இந்தியா கூட்டணியினருக்கு இரவு விருந்தளித்த கார்கே

image

இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரவு விருந்தளித்தார். இதில், சரத் பவார், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், திமுகவை சேர்ந்த கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல கூட்டணி கட்சி நிர்வாகிகளும், கூட்டணியில் இடம்பெறாத ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர்.

News August 12, 2025

ஆகஸ்ட் 12: வரலாற்றில் இன்று

image

*1948 – கர்நாடகா முதல்வர் சித்தராமையா பிறந்தநாள்.
*1979 – தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.வி.மெய்யப்பன் மறைந்த நாள்.
*1990 – அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*2015 – சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர், 800 பேர் காயமடைந்தனர்.

News August 12, 2025

போலி சாமியார் போக்சோவில் கைது

image

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் போக்சோவில் கைதானான். அம்மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் கலாநெமி’ என்ற பெயரில் போலி சாதுக்கள், துறவிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் சிக்கியவன் தான் தீபக் குமார் சைனி. சிவன் வேடத்தில் திரியும் இவன், ஆசி பெற வந்த சிறுமியிடம், வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக கூறி அத்துமீறியுள்ளான். இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாம்.

error: Content is protected !!