News August 12, 2025

OPS விவகாரத்தில் நயினார் மழுப்பலான பதில்

image

தோல்வி பயத்தில் உள்ள திமுக புதுப்புது திட்டங்களை கொண்டு வருவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி திறன் வெகுவாக குறைந்துள்ளதாக கூறிய அவர், கல்வியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்வது ஆய்வறிக்கை மூலம் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாஜக கூட்டணிக்கு OPS மீண்டும் வருவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, அதுபற்றி பின்னர் பேசலாம் என மழுப்பலாக பதிலளித்தார்.

News August 12, 2025

25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. பலி எண்ணிக்கை உயர்வு

image

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கோயிலுக்கு சென்று திரும்பிய <<17376208>>வேன் <<>>பள்ளத்தில் விழுந்த விபத்தில், பலியான பெண்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. 20- 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேனில் இருந்து மீட்கப்பட்ட 27 பேர் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. CM தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து, பலியானோர் குடும்பத்தினருக்கு ₹4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

News August 12, 2025

கோலிவுட்டுக்கு புது ரூட் போட்டு கொடுத்த ரஜினி!

image

ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என தமிழ் சினிமாவை உலக நாடுகளில் விரிவுப்படுத்திய பெருமை ரஜினியையே சாரும். தற்போது ‘கூலி’ படத்தின் மூலம் புதிய மார்க்கெட் ஒன்றையும் அவர் திறந்துள்ளார். ஜெர்மனியில் ‘கூலி’ படத்துக்கு தற்போது வரை 10,000 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்மூலம் ஜெர்மனியில் தமிழ் படங்களுக்கு புதிய மார்க்கெட் ஓபன் ஆகியுள்ளது.

News August 12, 2025

இமாலய சாதனை படைத்த INDvsENG 5-வது டெஸ்ட்!

image

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்டின் 5-வது நாள் போட்டியை, சுமார் 1.3 கோடி மக்கள் ஹாட்ஸ்டாரில் கண்டுகளித்துள்ளனர். டிஜிட்டல் பிளாட்பார்மில் டெஸ்ட் போட்டி ஒன்றுக்கு கிடைத்த அதிகபட்ச Viewership இதுதான். 5-வது நாளில், வெறும் 36 ரன்களை எடுக்க முடியாமல், இங்கிலாந்து அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. நீங்க போட்டியை எதில் பாத்தீங்க?

News August 12, 2025

வீரியமடையும் ‘வாக்கு திருட்டு’ சர்ச்சை.. AAP பகீர் புகார்

image

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து டெல்லி பேரவை தேர்தலில் BJP வெற்றி பெற்றதாக கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தலை செல்லாது என அறிவிக்க வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே ஒடிசா <<17379397>>Ex CM நவீன் பட்நாயக்கும்<<>> இதே புகாரை கூறியிருந்தார். இன்னும் சற்று நேரத்தில் பார்லிமெண்ட்டில் இது தொடர்பாக விவாதம் நடக்க உள்ளது.

News August 12, 2025

அடுத்த 48 மணி நேரத்தில்.. கனமழை வெளுக்கும்!

image

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது 48 மணி நேரத்தில் வலுவடையும் என்றும் IMD கணித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. உங்க ஊரில் மழையா?

News August 12, 2025

பெண் கையை பிடித்து இழுத்தால் குற்றமா? தீர்ப்பு

image

திருமணமாகாத மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த வழக்கில் முருகேசன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஒரு ஆண் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்திருப்பது குற்றமாகாது எனக்கூறி 3 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

News August 12, 2025

ஒடிசாவில் தேர்தல் முறைகேடு: பிஜு ஜனதா தளம் புகார்

image

ஒடிசாவில் நடத்த லோக்சபா, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக BJD தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் ECI கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ள BJD, கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News August 12, 2025

புதிய பாதையில் இந்திய கிரிக்கெட் அணி!

image

நடுத்தரவர்க்க, மாநகரவாசிகளின் அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, இன்று அனைத்து தரப்புக்குமானதாக மாறிவருகிறது. சமீபத்திய தொடரில், ஒவ்வொரு டெஸ்ட்டிலும் குறைந்தது 8 வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். லார்ட்ஸில் அதிகபட்சமாக 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் களமிறங்கினர். கில்(Sikh) வழிநடத்தும் அணியின் வேகப்பந்து வீச்சுப் படைக்கு பும்ரா(Sikh), சிராஜ்(Muslim) தலைமை ஏற்றுள்ளனர்.

News August 12, 2025

பிரியங்கா காந்தியை காணவில்லை.. பரபரப்பு புகார்

image

வயநாடு காவல்துறையில் MP பிரியங்கா காந்தியை காணவில்லை என பாஜக நிர்வாகி முகுந்தன் பல்லியரா மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தியை 3 மாதங்களாக காணவில்லை எனவும், சூரல்மலையில் ஏற்பட்ட பாதிப்பின் போது மக்களோடு இருக்கவில்லை எனவும் புகாரளித்துள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கடந்த 2 மாதங்களாக தொகுதியில் காணவில்லை என திருச்சூர் போலீஸிடம் மாணவர் காங்கிரஸ் புகாரளித்திருந்தது.

error: Content is protected !!