News August 13, 2025

ராசி பலன்கள் (13.08.2025)

image

➤ மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – லாபம் ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – விவேகம் ➤ கன்னி – தடங்கல் ➤ துலாம் – அமைதி ➤ விருச்சிகம் – பொறுமை ➤ தனுசு – அன்பு ➤ மகரம் – மகிழ்ச்சி ➤ கும்பம் – வெற்றி ➤ மீனம் – இன்பம்.

News August 13, 2025

வாவ்! 3 நாள்களில் 343 லிட்டர் பால் கொடுத்த பசு!

image

பிரேசிலில் Holstein-Friesian இனத்தை சேர்ந்த பசு ஒன்று, உலக சாதனை படைத்துள்ளது. சாதாரணமாக ஒரு பசு ஒரு நாளைக்கு 10 லிட்டர் பால் கறக்கையில், இது 114 லிட்டர் என்ற கணக்கில் 3 நாள்களில் 343 லிட்டர் பால் கறந்துள்ளது. இதற்கு அதன் மரபியல், ஊட்டச்சத்தான உணவு, பராமரிப்பு & நவீன தொழில்நுட்பம் ஆகியவை காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். நம் நாட்டில் உள்ள முர்ரா & நீலி ரவி இனங்களும் இதே அளவு பால் தரக்கூடியவை.

News August 13, 2025

நீங்க இதை செய்றீங்களா? உடனே நிறுத்துங்க!

image

நீங்கள் தினமும் சாதாரணமாக செய்யும் சில விஷயங்கள் உங்கள் உடல்நலத்துக்கு எவ்வளவு கேடாக மாறலாம் தெரியுமா? சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை பாதிக்கும். தலையணைக்கு கீழே போன் வைத்து தூங்குவது தூக்கத்தை பாதிக்கும். நீண்டநேரம் நின்றுகொண்டிருப்பது ரத்தம் உறைதல் ஆபத்தை ஏற்படுத்தலாம். மிகவும் சூடாக சாப்பிடுவது உணவுக்குழாய் கேன்சருக்கு காரணமாகலாம். காது குடைவதால் கேட்கும் திறன் பாதிக்கலாம். உஷார்!

News August 12, 2025

டின்னருக்கு முன்பும், பின்பும்: இதை மறக்காதீங்க

image

உங்கள் இரவு உணவை சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் நினைவில் கொள்ள வேண்டிய 5 ஆரோக்கியமான விஷயங்கள்: *உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும். *சாப்பிட்ட பின் கடுமையான உடற்பயிற்சியை தவிர்க்கவும்; மெதுவாக நடைப்பயிற்சி செய்யலாம் *புகைப்பிடிக்க கூடாது *சாப்பிட்ட பிறகு குளிப்பதை தவிர்க்கவும் *இரவு உணவுக்கு பிறகு பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

News August 12, 2025

புதிய வருமான வரி மசோதா 2 அவைகளிலும் நிறைவேறியது

image

புதிய வருமான வரி மசோதாவில் புதியதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை என FM நிர்மலா கூறியுள்ளார். *LIC, பென்ஷன் போன்ற நிதி திட்டங்களில் இருந்து கிடைக்கும் தொகைக்கு, இனி முழுமையாக வரி விலக்கு கிடைக்கும். *சிறு, குறு நிறுவனங்களின் வரி வரையறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. *வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்த பின்னரும், அபராதம் செலுத்தாமல் TDS தொகையை திரும்ப பெற முடியும். SHARE IT.

News August 12, 2025

திமுகவில் இணைந்த OPS அணி மா.செ., ஆயில் ரமேஷ்!

image

கரூர் மேற்கு மாவட்ட அதிமுக(OPS அணி) செயலாளர் ஆயில் ரமேஷ் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அதேபோல், அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரண்ராஜ், கவின், சிவபாலன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் மாற்றுக் கட்சியினர் பலரையும் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்து வருகிறார்.

News August 12, 2025

பெண்கள் இறுக்கமாக அணிந்தால்… அலர்ட்

image

பெண்களின் ஃபேவரைட் உடைகளில் ஒன்றான `ஸ்கின்னி’ ஜீன்ஸ் பேன்ட் அணிவது, கருப்பைத் தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இடுப்புப் பகுதியில் வெப்பத்தை இது அதிகரிக்கிறது. மேலும் மாதவிலக்கு பிரச்னைகள், பூஞ்சை தொற்று, சிறுநீர்பாதை தொற்று, தசைகள் – நரம்புகள் சேதமடைதல், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பையும் இது அதிகரிக்கிறதாம்.

News August 12, 2025

3 நாள்கள் தொடர் விடுமுறை.. சிறப்பு ரயில், பஸ்கள் அறிவிப்பு

image

ஆக.15, 16 மற்றும் 17-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே <<17332494>>சிறப்பு ரயில்களை<<>> அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் <<17375212>>சிறப்பு பஸ்களை<<>> அறிவித்துள்ளது. கடைசி நேர சிரமத்தை தவிர்க்கும் வகையில் பலரும் இப்போதே முன்பதிவு செய்து வருகின்றனர். நீங்க பண்ணிட்டீங்களா?

News August 12, 2025

தவெக மாநாடு.. தொண்டர்களுக்கு அப்டேட்!

image

கூட்ட நெரிசலில் சிக்கக்கூடாது என்பதால் தவெக மாநாட்டிற்கு வருபவர்களுக்கு உணவளிக்கப்படாது எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் உணவு ஏற்பாடு செய்து கொடுக்கலாம் என விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி மாநாட்டின்போதே தொண்டர்கள் உணவின்றி தவித்த செய்திகள் வெளியாகின. அதேநிலை, மதுரையிலும் தொடருமா?

News August 12, 2025

எந்த வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் தெரியுமா?

image

முக்கிய வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் தெரியுமா: *SBI: ₹0-₹0 (Rural-Urban/Metro Branches), *BOI: ₹0-₹0, *PNB: ₹0-₹0, *Canara: ₹0-₹0, *UBI: ₹250-₹1,000, *HDFC: ₹2,500-₹10,000; *Axis: ₹2,500-₹12,000, *BOB: ₹500-₹2,000, *ICICI: ₹10,000-₹50,000, *Kotak: ₹10,000-₹20,000, *IDBI: ₹2,500-₹10,000, *Indian Bank: ₹1,000-₹2,500 (with cheque). உங்கள் வங்கியில் எவ்வளவு? கமென்ட்டில் சொல்லுங்கள்.

error: Content is protected !!