News August 13, 2025

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

image

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஆனால், புயலால் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவை, நீலகிரியில் கனமழைக்கு சற்று வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

₹100 கோடி வசூல்.. சம்பளத்தை உயர்த்திய VJS..

image

விஜய்சேதுபதி – நித்யாமேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படம் உலகம் முழுவதும் இதுவரை ₹93 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ₹100 கோடி வசூலை படைக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றியை அடுத்து விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பாண்டியராஜ் தங்களது சம்பளத்தை உயர்த்திவிட்டனராம். இதனால் அவர்கள் இருவரும் இணையும் அடுத்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் தயக்கம் காட்டுகிறாராம்.

News August 13, 2025

BIG BREAKING: திமுகவில் இணைகிறார் மைத்ரேயன்

image

அதிமுக முன்னாள் MP-யும், அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் சற்றுநேரத்தில் திமுகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக இரண்டாக உடைந்தபோது OPS பக்கம் இருந்த அவர், பின்னர் பாஜகவில் இணைந்தார். அதன்பின் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் EPS முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணையவிருக்கிறார்.

News August 13, 2025

இனி வாட்ஸ்ஆப் மட்டும் இருந்தா போதும் மக்களே…

image

தமிழ்நாடு அரசின் 50 சேவைகள் விரைவில் வாட்ஸ்ஆப் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு, இருப்பிட சான்று, வருவாய் சான்றிதழ், அரசு பேருந்து டிக்கெட் உள்ளிட்ட சேவைகள் வாட்ஸ்ஆப்பில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே TN DIPR என்ற வாட்ஸ்ஆப் சேனல் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. உங்கள் என்ன சேவை வாட்ஸ்ஆப்பில் வேண்டும்?

News August 13, 2025

டிரம்ப்பை சந்திக்கும் PM மோடி

image

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐநா பொது சபை கூட்டத்தில் PM மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா உடனான வர்த்தக பிரச்னைகளுக்கு மத்தியில் PM அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களுடன் பிரதமர் உயர்மட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

News August 13, 2025

ஆக.16 லீவ்! ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் கிடையாது

image

வாரந்தோறும் சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால், வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. இதனால், அன்றைய தினம் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் சனிக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறாது என்று அரசு தரப்பில் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News August 13, 2025

முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை தேவை: அன்புமணி

image

இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என CM உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய அவர், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என சாடியுள்ளார். 10.62 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானபோதும், ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ₹18,498 கோடி​தான் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

எத்தனால் கலப்பு பெட்ரோலால் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

image

எத்தனால் கலந்த பெட்ரோலால் வண்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பால் 30% கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதாகவும், எத்தனால் கலப்பு பெட்ரோலால் வண்டிகள் பழுதடைவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும், ஓட்டும் விதம், பராமரிப்பு உள்ளிட்ட காரணிகள் தான் வண்டியின் மைலேஜை தீர்மானிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

News August 13, 2025

திமுக ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது: கி.சாமி

image

கவின் ஆணவக்கொலையால் தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. திமுக, அவர்களது கொள்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு, உங்களுடன் ஸ்டாலின் என்பது ஏமாற்று வேலை. திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதன் மூலம், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணையாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

News August 13, 2025

SPORTS ROUNDUP: மகளிர் ODI WC.. பெங்களூருவில் இருந்து மாற்றம்

image

◆சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அனிசிமோவா(USA) & ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிட்சிபாஸ்(கிரீஸ்) ஆகியோர் அதிர்ச்சி தோல்வி.
◆2-வது T20: 53 ரன்கள் வித்தியாசத்தில் SA வெற்றி. முதலில் ஆடிய SA 20 ஓவர்களில் 218/7, AUS 17.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்.
◆மகளிர் ODI WC: பெங்களுரூவில் நடக்கவிருந்த அனைத்து போட்டிகளும் வேறு மைதானத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்.

error: Content is protected !!