News March 21, 2024
ஓம் சாந்தி ஓம் படத்தில் நடிக்க சம்பளம் வாங்காத படுகோன்

ஹிட்டான ஓம் சாந்தி ஓம் படத்தில் நடிக்க தீபிகா படுகோன் சம்பளம் வாங்கவில்லை. கடந்த 2007இல் வெளியான அந்தப் படத்தை தயாரித்து கதாநாயகனாக ஷாருக்கான் நடித்திருந்தார். அந்தப் படம் மூலம்தான் தீபிகா படுகோன் அறிமுகமானார். மொழி கடந்து அந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதில் சம்பளம் வாங்காமல் தீபிகா நடித்துள்ளார். எனினும், அந்த ஒரு படம் மூலம் பலகோடி சம்பளம் வாங்கும் நடிகையாக அவர் உயர்ந்தார்.
Similar News
News December 29, 2025
மகளிர் உரிமைத் தொகை ₹28,000.. CM ஸ்டாலின் அப்டேட்

திமுக ஆட்சியில் 1.30 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சியின் மகளிர் மாநாட்டில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையால் பெண்களுக்கு சுய மரியாதை, தன்னம்பிக்கை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், இதுவரை குடும்ப தலைவிகளுக்கு தலா ₹28,000 வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
News December 29, 2025
புத்தகம் இருக்கும் கையில் பட்டாக்கத்தியா? EPS

வடமாநில இளைஞர் மீது நடத்தப்பட்ட <
News December 29, 2025
₹1,100 கோடி.. வசூலில் சுழன்று அடிக்கும் ‘துரந்தர்’!

ரன்வீர் சிங் நடித்துள்ள ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘துரந்தர்’, உலகம் முழுவதும் ₹1,100.23 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ஷாருக்கானின் ‘பதான்’, பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படங்களின் வாழ்நாள் வசூலை முந்தியுள்ளது. அதேபோல், இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூலை ஈட்டிய 7-வது படமாகவும் உருவெடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் ₹862.23 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


