News May 23, 2024
சத்தீஸ்கர் ஆளுநராகும் பத்மஜா?

பாஜகவில் இணைந்த பத்மஜா, சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் விஸ்வபூஷன் உடல்நிலை சரியில்லாததால் அவர் பதவி விலக உள்ளதாகவும், அவருக்கு பதிலாக பத்மஜாவை அந்தப் பதவியில் நியமிக்கலாம் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரள Ex முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கருணாகரனின் மகள் பத்மஜா, சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 23, 2025
பெண்களுக்கு நார்மல் பிரசவம் நடப்பது இப்படிதான் (PHOTOS)

ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் உச்சபட்ச ஆசையும் நார்மல் டெலிவரி காண்பதே. பொதுவாக, 37 வாரங்களுக்கு பிறகு எந்த நேரத்திலும் பிரசவ வலி தொடங்கலாம். நீங்கள் எதிர்பார்த்தபடி இயற்கையாக வலி வந்தாலும் சரி, அல்லது மருத்துவ தலையீடு மூலம் வலி தூண்டப்பட்டாலும் சரி, நார்மல் டெலிவரி வெற்றியடைய சில முக்கிய அம்சங்கள் சரியான முறையில் அமைய வேண்டியது அவசியம். அவை என்னென்ன என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 23, 2025
BREAKING: விஜய் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்

காஞ்சி நிகழ்ச்சியில், தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெறப்போகும் சில அறிவிப்புகளை விஜய் வெளியிட்டுள்ளார். அதன்படி, *தவெக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு நிரந்தர வீடு *ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்க வேண்டும் என்பது லட்சியம் *வீட்டிலும் ஒருவருக்கு நிரந்தர வருமானம் *ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு கட்டாய பட்டப்படிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளார்.
News November 23, 2025
திமுக மீது வன்மம் இல்லை: விஜய்

காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் எம்ஜிஆர் பாடலுடன் விஜய் தனது பேச்சை தொடங்கினார். அப்போது, திமுகவினருடன் தவெகவினருக்கு தனிப்பட்ட முறையில் எந்த வன்மமும் இல்லை. ஆனால், திமுகவினருக்கு வேண்டுமானால் தவெக மீது தனிப்பட்ட வன்மம் இருக்கலாம் என்று சாடினார். மேலும், கொள்கை என்றால் என்ன விலை என்று கேட்கும் திமுகவின் கொள்கையே கொள்ளையடிப்பதுதான் என்று விமர்சித்தார்.


