News April 19, 2024
வரிசையில் நின்று வாக்களித்த பத்மஸ்ரீ பாட்டி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாது புதிய தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், முதியோர் என பலரும் வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், கோவை தேக்கம்பட்டியை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையாற்றியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
Similar News
News January 18, 2026
இவுங்கதான் பிக்பாஸ் 9 டைட்டில் வின்னரா?

இன்றுடன் முடிவடையும் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வாகியுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. 2-ம் இடத்தை சபரிநாதனும், 3-வது இடத்தை அரோராவும், 4-வது இடத்தை விக்ரமும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. Wild Card போட்டியாளர் ஒருவர் டைட்டில் வெல்வது இத்துடன் 2-வது முறையாகும். ஏற்கெனவே, 7-வது சீசனில் Wild Card போட்டியாளராக அர்ச்சனா வெற்றி பெற்றிருந்தார். இந்த சீசனில் உங்க ஃபேவரைட் யார்?
News January 18, 2026
இன்னைக்கு மதியம் 1:30 மணிக்கு மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய ஸ்டார் கிரிக்கெட்டர்கள் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ODI கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகின்றனர். NZ-க்கு எதிரான இன்றைய 3-வது ODI-ல் அவர்களின் ஆட்டத்தை பார்க்க தவறினால், அடுத்த 5 மாதங்களுக்கு Blue ஜெர்சியில் அவர்களை பார்க்க முடியாது. NZ தொடருக்கு பிறகு, இந்திய அணி ஜூன் மாதத்தில்தான் AFG-க்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்னைக்கு மிஸ் பண்ணிடாதீங்க?
News January 18, 2026
அல்கொய்தாவின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

கடந்த டிசம்பரில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, சிரியாவில் உள்ள <<18825125>>ISIS<<>> அமைப்பின் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கர்கள் மீதான ISIS தாக்குதலுடன் தொடர்புடைய அல்கொய்தா கிளை அமைப்பின் தலைவரை, அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றுள்ளது. கொல்லப்பட்ட பிலால் ஹசன் அல் ஜாசிம், ISIS-ன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


