News July 5, 2024
நெல்லை: வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான வண்டல் மண் எடுப்பதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க tnesevai.tn.gov.in இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை-09] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News July 9, 2025
நெல்லை: சிறுமியை கொலை செய்து கற்பழித்த வாலிபர்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில், 17 வயது சிறுமியை காதலித்து வந்த மாரிமுத்து (26) என்பவர், அப்பெண் தன்னை தவிர வேறு ஒருவருடன் பேசியதால் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்த நிலையில், சிறுமி இறந்தப்பின் அவரது உடலை கற்பழித்ததாகவும் அந்த வாலிபர் வாக்குமூலம் அளித்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீசார் மாரிமுத்துவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 9, 2025
நாங்குநேரி டோல்கேட்டில் நாளை முதல் பேருந்து தடை

கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச்சாவடிகளில் நாளை முதல் அரசுப் பேருந்துகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை அரசு போக்குவரத்து கழகங்கள் செலுத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், தென் மாவட்ட மக்களின் பயணங்கள் பாதிக்கப்படும் என அச்சம் எழுந்துள்ளது. * மக்களே உங்கள் பயணங்களை முன் கூட்டியே திட்டமிடவும்*