News August 2, 2024
செப்டம்பர் 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல், விவசாயிகளிடம் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதன்படி, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ₹2,320 மற்றும் தமிழக அரசின் ஊக்கத்தொகை ₹130, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ₹2,300 உடன் தமிழக அரசின் ஊக்கத்தொகை ₹105 சேர்த்து வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். மத்திய அரசு அறிவித்த ஆதார விலையுடன் சேர்த்து தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது.
Similar News
News September 18, 2025
காணாமல்போன நகரங்கள்

பழங்காலத்தில் செழிப்பாக, வளர்ந்த நாகரீகம் கொண்ட சில நகரங்கள் அழிந்துபோனதாக வரலாறு கூறுகிறது. ஆனால், சில நகரங்கள் தற்போதும் இருப்பதாக வதந்திகளும், கட்டுக்கதைகளும் உள்ளன. காலத்தால் அழிந்துபோன நகரங்களின் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. அதில் இல்லாமல் வேறு ஏதேனும் காணாமல்போன நகரம் உங்கள் தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
வாக்கு திருட்டு இப்படிதான் நடக்கிறது: ராகுல்

வாக்காளர் குறித்த அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் இருப்பதால் தான் வாக்கு திருட்டு எளிதில் நடப்பதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். வாக்கு திருட்டை நடத்த, சாஃப்ட்வேர்களை வைத்து ஒவ்வொரு பூத்திலிருந்தும் முதல் வாக்காளரின் தரவு நீக்கப்படுகிறதாம். பின்னர், நீக்கப்பட்ட நபரின் தகவலை வைத்தே சிம் கார்டுகளை வாங்கி மற்ற தொகுதிகளில் வாக்காளராக சேர்ந்துகொள்ளும்படி விண்ணப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
கடவுள் தொடர்பான வழக்கு: நீதிபதியின் கருத்தால் சர்ச்சை

ம.பி.யில் உள்ள ஜவாரி கோயிலில் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீட்க கோரி SC-ல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த CJI பி.ஆர்.கவாய், இவ்வழக்கு விளம்பரத்துக்காக தொடரப்பட்டது எனவும், அவ்வளவு பெரிய விஷ்ணு பக்தராக இருந்தால் சிலையை சீரமைக்க உங்கள் கடவுளிடமே கேளுங்கள் என மனுதாரரிடம் தெரிவித்துள்ளார். இவருடைய பேச்சு மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.