News October 25, 2025
நெல் ஈரப்பதம்: தமிழகத்தில் மத்திய அரசு இன்று ஆய்வு

நெல் கொள்முதல் செய்வதற்கான அதிகபட்ச ஈரப்பத அளவை 17%-ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. பலத்த மழையின் காரணமாக அதை 22%-ஆக குறைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை அளவை ஆய்வு செய்ய 3 குழுக்களை மத்திய அரசு அமைந்துள்ளது. இந்த குழுக்கள் இன்றும், நாளையும் செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்கிறது.
Similar News
News October 25, 2025
மகளிருக்கு மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேரும் மகளிருக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. +2 தேர்ச்சி பெற்று கார்டியோ சோனோகிராபி டெக்னிசியன், இசிஜி/ ட்ரெட் மில் டெக்னிசியன் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளில் சேர்பவர்களுக்கு புதுமைப்பெண், வெற்றி நிச்சயம் ஆகிய திட்டங்களின் மூலம் பணம் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் நவ.14 முதல் விண்ணப்பிக்கலாம்.
News October 25, 2025
‘கிங்’ கோலி அரைசதம்!

ஆஸி.,க்கு எதிரான 3-வது ODI-ல் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 56 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் கோலி டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில், தற்போது ரசிகர்கள் குதூகலத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இந்திய அணி 27.2 ஓவர்களில் 168/1 ரன்களை குவித்துள்ளது. Hitman ரோஹித்தும் அரைசதம் அடித்து, 77 ரன்களுடன் களத்தில் உள்ளார். ODI-யில் இது விராட் கோலியின் 75-வது அரைசதமாகும்.
News October 25, 2025
கல்லூரி வகுப்பறையில் பாலினப் பாகுபாடு சர்ச்சை

சத்யபாமா பல்கலை.,யில் மாணவ, மாணவிகளை தனித்தனியாக பிரித்து பாலின பாகுபாடு பார்ப்பதாக Lokpal அமைப்பில் மாணவர் புகார் அளித்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. கிளாஸ் ரூம், கேண்டீன், பஸ் என அனைத்து இடங்களிலும் இது தொடர்வதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தனது புகாரில் அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது தங்கள் வரம்பு இல்லை என Lokpal விசாரிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. உங்கள் கருத்து?


