News October 2, 2025
கார்கேவுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தம்

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இதயத் துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக, அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள M S ராமய்யா ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள அவரது உடல்நலம் சீராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News October 2, 2025
விஜய் ஆதரவாளர்கள் தலைமறைவு

கரூர் துயர வழக்கில் தலைமறைவாக உள்ளார் N ஆனந்த். இந்நிலையில், சென்னை மா.செக்கள் கூட்டம் அவர் இல்லாமல் நடைபெற்றுள்ளது. அத்துடன், விஜய்யின் சுற்றுப்பயண ரத்து அறிவிப்பும் ஆனந்த் கையெழுத்திட்ட லெட்டர் பேட் இல்லாமல், ட்வீட்டாகவே வெளியானது. ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம், CTR நிர்மல் குமாரும் தலைமறைவு ஆகியவற்றால், உயர்மட்ட நிர்வாகிகளின்றி தவெக தற்போது இயங்கி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News October 2, 2025
குத்தகைக்கு விடப்பட்ட ரசிகர் மன்றமே தவெக: கி.வீரமணி

கரூர் துயருக்கு விஜய் தனது தொண்டர்களை சரியாக கையாளாமல் இருப்பதும் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில், விஜய் அரசியல் கட்சி நடத்தவில்லை, இன்னும் ரசிகர் மன்றத்தையே நடத்துகிறார் என்று கி.வீரமணி விமர்சித்துள்ளார். அத்துடன், தமிழகத்தில் பாஜக போன்ற எதிர்கட்சிகளுக்கு திமுகவை எதிர்க்க குத்தகைக்கு விடப்பட்ட ரசிகர் மன்றம் தான் தவெக என்றும் கடுமையாக சாடியுள்ளார்.
News October 2, 2025
தமனுக்கு ரிவீட் அடித்தாரா சிம்பு?

சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘OG’ படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார். ஆனால், அந்த பாடல் வேறு ஒருவரது குரலில் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சிம்பு நடிக்கும் அடுத்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தமன் வேண்டாம், அனிருத்தை அணுகுங்கள் என்று சிம்பு சொல்லிவிட்டாராம். இதனால் இருவருக்குள்ளும் முரண்பாடு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.