News August 18, 2024
PAC தலைவராக கே.சி. வேணுகோபால் அறிவிப்பு

நாடாளுமன்ற பொது கணக்குக் குழுத் (PAC) தலைவராக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபாலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். ரயில்வே, பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற அமைச்சகங்களால் மேற்கொள்ளப்படும் செலவினங்கள், சிஏஜி அறிக்கைகளை PAC ஆய்வு செய்யும். PAC தலைவர் பதவி, மக்களவை எதிர்க்கட்சிக்கு அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி காங்கிரஸ் எம்பி வேணுகோபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
கேரள வாக்குச்சீட்டுகளில் தமிழ்

டிச.9, 11 ஆகிய தேதிகளில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மொழி சிறுபான்மையினர் வசிக்கும் வார்டுகளில், வாக்குச்சீட்டுகளிலும் வாக்களிப்பதற்கான அடையாள சீட்டுகளிலும், வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ், கன்னடத்தில் இருக்கும் என ECI அறிவித்துள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் தமிழ் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
நவம்பர் 27: வரலாற்றில் இன்று

*மாவீரர் நாள்.
*1895 – நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்த ஆல்ஃபிரட் நோபல், தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
*1940 – புரூஸ் லீ பிறந்தநாள்.
*1977 – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.
*1986 – சுரேஷ் ரெய்னா பிறந்தநாள்.
*2008 – முன்னாள் PM வி.பி.சிங் நினைவுநாள்.
News November 27, 2025
டெஸ்லாவின் முதல் முழுநேர சேவை மையம் தொடக்கம்

டெஸ்லா கார் நிறுவனம், இந்தியாவில் முதல் முழுநேர விற்பனை மையத்தை ஹரியானாவில் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் கஸ்டமர்கள் ஆலோசனைகள், புக்கிங், டெஸ்ட் டிரைவ் சேவைகளை பெறலாம். முன்னதாக, மும்பை மற்றும் டெல்லியில் அமைக்கப்பட்ட மையங்கள் காட்சிப்படுத்துதல் மையங்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. டெஸ்லா நிறுவனம் தனது 2 ‘Y’ வேரியண்ட் மாடல்களை மட்டுமே இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.


