News November 23, 2024

ஐயப்பனை கொச்சைப்படுத்திய பா.ரஞ்சித்?

image

ஐயப்பனையும், அவருக்காக மேற்கொள்ளும் விரதங்களையும் கொச்சைப்படுத்தியதாக கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாடலைப் பாடிய பாடகி கானா இசைவாணி மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையத்தின் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

Similar News

News November 20, 2025

ஆரிய சூழ்ச்சிகளை உடைத்தெறிவோம்: CM ஸ்டாலின்

image

நீதிக்கட்சி தொடங்கிய நாளையொட்டி X தளத்தில் பதிவிட்டுள்ள CM ஸ்டாலின், மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் உரிய பங்கை பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்ட, தாய் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று என குறிப்பிட்டுள்ளார். நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி என மெய்ப்பிப்போம் என்று கூறியுள்ள அவர், ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

News November 20, 2025

உடைகிறதா BJP-சிவசேனா கூட்டணி?

image

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கூட்டணியான பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, மகராஷ்டிரா BJP, சிவசேனா தலைவர்களை பாஜக பக்கம் இழுப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். கூட்டணி பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளுமாறும் அமித்ஷாவிடம் அவர் வலியுறுத்தினார்.

News November 20, 2025

Cinema Roundup: ரஜினி படத்தில் இணைந்த அபேக்‌ஷா போர்வால்

image

*ஜித்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’ பட ஷூட்டிங் வரும் டிச., 8-ம் தேதி கேரளாவில் தொடங்குகிறது. *9 படங்களில் நடித்து கொண்டு பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. *‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் ஒருவாரம் (டிச.12) தள்ளிப்போவதாக தகவல். *‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் தாமதமான நிலையில், வரும் 28-ம் தேதி வெளியாவதாக அறிவிப்பு. *’ஜெயிலர் 2’ படத்தில் இந்தி நடிகை அபேக்‌ஷா போர்வால் நடிக்க உள்ளதாக தகவல்.

error: Content is protected !!