News August 6, 2025

EPS-க்கு சவால் விட்ட பெ.சண்முகம்

image

ED, IT ரெய்டுக்கு பயந்து BJP-வுடன் EPS கூட்டு சேர்ந்துள்ளதாக பெ.சண்முகம் சாடியுள்ளார். தேர்தலில் சீட்டுக்காக மக்களின் பிரச்னைகளுக்கு கம்யூனிஸ்ட்டுகள் திமுகவுக்கு எதிராக போராட தயங்குவதாக EPS விமர்சித்திருந்தார். இதனிடையே, நீங்கள் மக்களுக்கான பிரச்னையில் எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளீர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தயாரா? என EPS-க்கு சண்முகம் சவால் விடுத்துள்ளார்.

Similar News

News August 6, 2025

FLASH: அமெரிக்காவுக்கு இந்தியா விடுத்த எச்சரிக்கை

image

இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 140 கோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே ரஷ்யாவிடம் இருந்து Oil பொருள்கள் வாங்குவதாகவும், தேச நலனை காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது. மேலும், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவை போலவே இந்தியாவும் செயல்பட நேரிடும் எனவும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

News August 6, 2025

நடிகை M.N.ராஜம் ஆசையை நிறைவேற்றிய CM ஸ்டாலின்

image

சென்னை அடையாறில் பழம்பெரும் நடிகை M.N.ராஜம்-ஐ CM ஸ்டாலின் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த நடிகை ராஜம், CM ஸ்டாலினை நேரில் சந்திக்க விரும்புவதாக தனது ஆசையை கூறியிருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்ற CM ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தனர்.

News August 6, 2025

₹1 ரீசார்ஜ் செய்தால் 1 மாதம் இலவசம்: BSNL அதிரடி ஆஃபர்

image

சுதந்திர தின சலுகையாக ‘BSNL Freedom Offer’ அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு அதிவேக 4ஜி டேட்டா(2 GB), 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அத்துடன் புதிதாக ஒரு சிம் கார்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆஃபர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மட்டுமே. மேலும் விவரங்களுக்கு உங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!