News April 2, 2024
அதிமுக கூட்டணியில் இணைந்த ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்

நாடாளுமன்றத் தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இக்கட்சி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக உடன் கூட்டணி அமைத்து, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறை அமமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததால், அக்கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஓவைசி-க்கு ஓரளவுக்கு ஆதரவு இருக்கிறது.
Similar News
News January 26, 2026
ஊழல் பல்கலை.,யின் வேந்தர் PM மோடி: உதயநிதி

இந்தியாவில் ஊழலுக்கு ஒரு பல்கலை., இருந்தால் அதற்கு PM மோடி தான் வேந்தர் என உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசு குறித்தும், ஊழல் குறித்தும் பேச PM மோடி, அமித்ஷாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்களை வைத்துக் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மோடி முயல்வதாகவும் சாடியுள்ளார்.
News January 26, 2026
FLASH: அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லை.. உறுதியானது

அதிமுக கூட்டணியில் விஜய் இணையப்போவதில்லை என்பதை நேற்றைய <<18953053>>காட்சிகள் உறுதி செய்துள்ளன<<>>. நேற்று முன்தினம் வரை விஜய்க்கு அழைப்பு விடுத்து வந்த அதிமுக, பாஜக தலைவர்கள், நேற்றைய செயல் வீரர்கள் கூட்டத்திற்கு பிறகு விஜய்யை வசைபாட தொடங்கியுள்ளனர். ஒருபடி மேல் போய் <<18957237>> விஜய்யை ஊழல்வாதி<<>> என அதிமுக விமர்சித்துள்ளது. இது, வரும் தேர்தலில் விஜய் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
News January 26, 2026
குடியரசு தினம் ஏன் ஜன.26ல் கொண்டாடப்படுகிறது?

இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றாலும், அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வர 1950 வரை ஆனது. 1930 ஜனவரி 26 அன்றுதான் இந்திய தேசிய காங்கிரஸ் ’முழு சுதந்திரம்’ தீர்மானத்தை முதன்முதலில் அறிவித்தது. அந்த நாளைக் கௌரவிக்கவே குடியரசு தினம் ஜன.26-ல் கொண்டாடப்படுகிறது. மேலும் டெல்லியில் இன்று தொடங்கும் குடியரசு தின கொண்டாட்டம், ஜன.29-ம் தேதி மாலை நடைபெறும் கோலாகல இசை அணிவகுப்புடன் தான் நிறைவடையும்.


