News June 17, 2024
மக்களின் மனதை வெல்வதே எங்களின் கனவு: சீமான்

2026இல் சட்டமன்றத்தில் புலிப்படை நுழைவது உறுதி என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறியுள்ளார். மயிலாடுதுறையில் பேசிய அவர், “நாடாளுமன்றத்திற்கு சென்று பேசுகிறோமோ இல்லையோ, மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக பேசுவோம். உயர்ந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்போம். எங்கள் கனவு தேர்தலில் வென்று பதவியை பிடிப்பதல்ல; மக்களின் மனதையும் சிந்தனையையும் வெல்வதுதான் எங்கள் கனவு” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 25, 2026
போரை நிறுத்த ஈரான் வைக்கும் டிமாண்ட்

USA உடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் சில நிபந்தனைகள் விதித்துள்ளதாம். ➤வளைகுடாவில் உள்ள USA தளங்களை மூடவேண்டும் ➤போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு ➤ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிக்கும் ➤ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும். மேலும், தனது ஏவுகணை திட்டத்தை கைவிட முடியாது என்றும், ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் தாக்கக் கூடாது என்றும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
News March 25, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 உயர்ந்தது!

<<19470679>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. சில்லறை விற்பனையில் கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹260-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹2,60,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை இன்று மட்டும் 6% உயர்ந்துள்ளதால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 25, 2026
தொகுதி பங்கீட்டில் இபிஎஸ் கை ஓங்கியதா?

கூட்டணிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததில் ஸ்டாலினை விட EPS கை ஓங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. 2021-ல் வெறும் 0.5% வாக்கு வாங்கிய தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை திமுக கொடுத்த நிலையில், 2.3% வாக்கு வாங்கிய அமமுகவுக்கோ 11 தொகுதிகளை கொடுத்து அதிமுக சரிகட்டியுள்ளது. அதேபோல், பாமக வரலாற்றிலேயே மிக குறைந்த எண்ணிக்கையாக 18 தொகுதிகள், காங்கிரஸை விட குறைவாக பாஜகவுக்கு 27 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.


