News October 21, 2024
இந்த வாரம் OTT ரிலீசாகும் படங்கள்

வருகிற 25ஆம் தேதி 2 தமிழ் படங்களும், 1 வெப் தொடரும் OTT-யில் வெளியாக உள்ளன. பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ரிலீசாக உள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இயக்கி, நடித்த ‘கடைசி உலகப் போர்’ அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. ‘மர்மதேசம்’ இயக்குநர் நாகா இயக்கியுள்ள ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடர் ZEE5 தளத்தில் ரிலீசாக உள்ளது.
Similar News
News August 21, 2025
இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க

தமிழகத்தின் பல பகுதியில் காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவில் 24 மாவட்டங்களில் மழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சேலம், க.குறிச்சி, தி.மலை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி, ஈரோடு, திருச்சி, கரூர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும்.
News August 21, 2025
Parenting: உங்க குழந்தை உயரமா வளரணுமா? இத கொடுங்க..

உங்கள் குழந்தை வயதுக்கேற்ற உயரத்துடன் வளரவில்லை என கவலையா? டாக்டர்கள் கூறும் இந்த பவுடரை வீட்டிலேயே அரைத்து கொடுத்து பாருங்கள். ▶முதலில், ஆளி விதை, பாதாம், வால்நட்ஸ், பூசணி விதை & தேங்காயை ஒரு பாத்திரத்தில் வறுக்கவும். ▶அதை நன்றாக அரைத்து, கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும். ▶இதை தூங்குவதற்கு முன், பாலில் கலந்து கொடுக்கவும். இதில் உள்ள ஊட்டச்சத்து குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். SHARE.
News August 21, 2025
மேடையில் MGR பாடலை பாடிய விஜய்..

தவெக மாநாட்டில் உரையாற்றிய போது பல இடங்களில் எம்.ஜி.ஆர் பற்றி பேசிய விஜய், ’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்ற ‘எங்க வீட்டுப் பிள்ளை’ பட பாடலையும் பாடினார். பாசிச பாஜகவும், பாய்சன் திமுகவும் வைத்திருக்கும் மறைமுக உறவை ஒழிக்க மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுக்கவேண்டும் எனக் கூறிய அவர், நீட் ரத்து, மீனவர்கள் கைது தொடர்பாக பிரதமர் மோடிக்கு பல கோரிக்கைகளை வைத்தார்.