News August 23, 2025
ஓஷோவின் பொன்மொழிகள்

*பயம் முடிகிற இடத்தில் வாழ்க்கைத் தொடங்குகிறது.
*இயல்பாக இருங்கள், அற்புதத்திற்கு திட்டமிடுங்கள்.
*யாரோ ஒருவராகும் எண்ணத்தைக் கைவிடுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. விஷயம் என்னவெனில் இதை நீங்கள் உணர்ந்து, புரிந்து, ஏற்பது மட்டுமே.
*உங்களை தவிர யாராலும் உங்களை கோபப்படுவதும் முடியாது. மகிழ்ச்சியாக்கவும் முடியாது. *நட்சத்திரங்களை பார்க்க கொஞ்சமாவது இருள் தேவை.
Similar News
News March 21, 2026
திமுகவுக்கு கெடு விதித்த தவாக.. அடுத்த ஆப்ஷன்

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்குள் திமுக தரப்பு பதிலளிக்கவில்லையென்றால், கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவோம் என்று வேல்முருகன் கூறியுள்ளார். அதேநேரம், அதிமுக கூட்டணியில் 3 சீட்கள் வரை தருவதற்கு தவாகவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, நாளை காலை கூட்டணி பற்றிய முடிவை தவாக எடுக்கும் என கூறப்படுகிறது.
News March 21, 2026
BREAKING: தமிழ்நாடு முழுவதும் விலை உயர்ந்தது

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை TN முழுவதும் உயர்த்தப்படுவதாக தமிழக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, 20 லிட்டர் கேன் ஐந்து ரூபாயும், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் மூன்று ரூபாயும் உயர்த்தப்படுகிறது. மூலப்பொருள்களின் விலை, வேலையாட்களின் சம்பளம், மின்சார கட்டணம் உயர்வு காரணங்களால் விலை உயர்த்தப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
News March 21, 2026
ஒரே வாரத்தில் ₹94 லட்சம் கோடி இழப்பு

ஈரான் – இஸ்ரேல், US போரால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. அந்தவகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் US பங்குச்சந்தையில் ₹282 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் மட்டும் ஏற்பட்ட வீழ்ச்சியால் ₹94 லட்சம் கோடி இழப்பை US பங்குச்சந்தை சந்தித்துள்ளது. S&P 500 குறியீட்டு எண்ணும் 5.83% வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.


