News January 23, 2025
Oscars 2025: இந்தியாவின் பேர் சொல்ல ஒரு படம்!

2025 ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட கங்குவா, Girls Will Be Girls, All We Imagine As Light, ஆடுஜீவிதம், வீர் சாவர்க்கர் படங்களில் எதுவும் தேர்வாகவில்லை. குனீத் மோங்கா கபூர், பிரியங்கா சோப்ரா தயாரித்த ‘அனுஜா’ குறும்படம், Live Action Short Film பிரிவில் இடம் பெற்றுள்ளது. 2024ல் இந்தியாவின் The Elephant Whisperers விருது வாங்கியது.
Similar News
News November 9, 2025
அதிமுகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது: EPS

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என EPS பேசியுள்ளார். காற்றை எப்படி தடை போட முடியாதோ, அது போல தான் அதிமுகவை தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கூடவே இருந்த பல எட்டப்பர்களின், வீழ்த்தும் முயற்சிகளை எல்லாம் முறியடித்து அதிமுக தலைநிமிர்ந்து நிற்பதாக EPS தெரிவித்தார். மேலும், இந்தியாவில் எந்த கட்சியும் அதிமுகவை போல கடும் சோதனைகளை சந்திக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
News November 9, 2025
நிலவு ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்

2019-ல் நிலவை ஆராய்ச்சி செய்திட ஏவப்பட்ட சந்திராயன்-2, இன்றளவிலும் அதன் பணியை சிறப்பாக செய்கிறது. அகமதாபாத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன்-2 அனுப்பும் தகவல்களை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுவரை 1,400 ரேடார் தரவுத்தொகுப்புகள் சேகரிக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக நிலவில் L பேண்ட் ரேடார் மேப்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை வைத்து நிலவில் தண்ணீர், ஐஸ்-ன் தடங்களை கண்டறிய வாய்ப்புள்ளது.
News November 9, 2025
எந்த காவியாலும் திமுகவை வீழ்த்த முடியாது: CM ஸ்டாலின்

EC-ஐ பயன்படுத்தி திமுகவை திருட்டுத்தனமாக வீழ்த்த நடக்கும் முயற்சி தான் SIR என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்திருக்கும் போது எந்த காவியாலும் திமுகவை எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவசர அவசரமாக SIR அமல்படுத்துவது ஏன் என கேள்வி எழுப்பிய CM, வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர் இடம்பெறாமல் இருப்பதை திமுகவினர் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.


