News April 10, 2025
ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் பிரபலம் காலமானார்

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் பிரபலம் மார்வின் லெவி (96) காலமானார். ஜூராசிக் பார்க் புகழ் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் பி.ஆர்.ஓ.ஆக 50 ஆண்டுகளாக அவர் பணிபுரிந்துள்ளார். மக்களிடம் படங்களை எப்படி கொண்டு செல்வது என்பதில் நிபுணத்துவம் பெற்று விளங்கியதால், லெவிக்கு கடந்த 2018-ல் கவுரவ ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. இதன்மூலம் ஆஸ்கர் விருது பெற்ற ஒரே பி.ஆர்.ஓ. எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
Similar News
News October 19, 2025
ராசி பலன்கள் (19.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 19, 2025
VDK உடன் திருமணமா? வெட்கப்பட்ட ரஷ்மிகா

விஜய் தேவரகொண்டாவுடன் ரஷ்மிகா மந்தனா கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே, ரஷ்மிகா அணிந்திருந்த மோதிரமும் பேசுபொருளானது. இந்நிலையில், இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கேட்டபோது, வெட்கப்பட்டுக் கொண்டே ரஷ்மிகா நின்றதால், ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்துவிட்டனர். ஆனால், இல்லை என்று மறுத்துவிட்டார். இருப்பினும், ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
News October 19, 2025
ஆண்மை குறையும்.. ஆண்களே இதை செய்ய வேண்டாம்

ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது ஆய்வில் உறுதியாகியுள்ளது. உலகம் முழுதும் ஆண்களிடம் நடந்த தொடர் ஆய்வில், 1973-ல் இருந்ததைவிட 2011-ல் விந்தணுக்கள் எண்ணிக்கை 59.3% குறைந்துள்ளதுடன், அவற்றின் செயல்திறனும் குறைந்துள்ளது உறுதியாகியுள்ளது. நவீன வாழ்வியல் முறை, தவறான உணவுப் பழக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு, நச்சு ரசாயனங்கள், மது, ஸ்மார்ட்போன் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாம். உஷார்!