News March 25, 2025
இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்ட ஆஸ்கர் வென்ற இயக்குநர்!

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஹம்தான் பல்லால், இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்டு கைதாகி இருக்கிறார். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனின் ‘வெஸ்ட் பேங்க்’ பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஹம்தான் தற்போது எங்கு இருக்கிறார் என்ற தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் கொடூரங்களை மையமாக கொண்ட ‘No Other Land’ படத்தை ஹம்தான் இயக்கினார்.
Similar News
News August 24, 2025
MGR-யை விட ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு அதிகம்: KN நேரு

விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நட்டால் தான் பயிர் நன்றாக விளையும், அதுபோல் திமுக நன்றாக வளர்ந்து வருவதாக அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணியை அந்த கட்சியின் தொண்டர்களே ஏற்று கொள்ளவில்லை என விமர்சித்தார். மேலும், MGR-யை விட, தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெண்களின் ஆதரவு CM ஸ்டாலினுக்கு அதிகரித்துள்ளதாக கூறினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
News August 24, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்… மன அழுத்தத்தில் ஊழியர்கள் ?

‘உங்களுடன் ஸ்டாலின்’ உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்ற நிர்பந்திக்கப்படுவதாக வருவாய்த்துறை ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபோன்ற திட்டங்களில் பணி செய்யுமாறு நிர்பந்திப்பதை உயர் அதிகாரிகள் கைவிட வேண்டும் எனவும் இதனால் தாங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஜூலை 1-ம் தேதியை வருவாய்த்துறை தினமாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளனர். ஊழியர்களின் குற்றச்சாட்டு நியாயமானதா?
News August 24, 2025
ராசி பலன்கள் (24.08.2025)

➤ மேஷம் – களிப்பு ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – கீர்த்தி ➤ கடகம் – சிரமம் ➤ சிம்மம் – அசதி ➤ கன்னி – பிரீதி ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – ஓய்வு ➤ தனுசு – பிரயாணம் ➤ மகரம் – திறமை ➤ கும்பம் – நன்மை ➤ மீனம் – அனுகூலம்.