News March 30, 2024
ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்

RCB, KKR இடையிலான நேற்றைய லீக் ஆட்டத்தின்போது, விராட் கோலியை கவுதம் கம்பீர் கட்டியணைத்தார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்த்த சுனில் கவாஸ்கர், தனக்கே உரிய பாணியில் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். அதாவது, “KKR அணிக்கு ஃபேர்பிளே விருது கிடைக்கும் என்று ரவி சாஸ்திரி கூறுகிறார். கோலி, கம்பீர் கட்டியணைத்துக் கொண்டதற்காக ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News August 14, 2025
தெருநாய்கள் விவகாரம்: SC குற்றச்சாட்டு

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லையால், டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் காப்பகத்துக்கு மாற்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி பல்வேறு விலங்கு நல அமைப்புகள் SC-ல் மனுத்தாக்கல் செய்தன. இதன் விசாரணையின்போது, தெருநாய்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளை உள்ளாட்சி அதிகாரிகள் சரிவர பின்பற்றவில்லை என கோர்ட் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
News August 14, 2025
திமுக அரசுக்கு எதிரான வழக்கு: மீண்டும் அபராதம்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் ₹1 லட்சம் அபராதத்தையும் விதித்துள்ளது. வழக்கறிஞர் சத்தியகுமார் தாக்கல் செய்த இந்த வழக்கை வாபஸ் பெறவும், ஐகோர்ட் அனுமதி மறுத்தது. ஏற்கெனவே <<17319854>>இதேபோன்ற வழக்கில்<<>> SC விதித்த ₹10 லட்சம் அபராதத்தை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கோர்ட்டில் செலுத்தியுள்ளார்.
News August 14, 2025
17 வயது சச்சின் சிறப்பான சம்பவம் செய்த நாள் இன்று

1990-ம் ஆண்டு இதே நாளில் மான்செஸ்டரில் இந்திய கிரிக்கெட் அணியை வெல்ல வைக்க களமிறங்கியது இளஞ்சிங்கம். அன்று அவருக்கு வயது 17. அந்த இளம் வீரர், 189 பந்துகளில் 17 பவுண்டரிகள் உடன் 119 (முதல் சதம்) ரன்களை விளாசினார். இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அவரை திரும்பிப் பார்த்தது. அவர்தான் கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர்.