News June 26, 2024
ரவி வர்மனுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் அகாடமி

ஆஸ்கர் அகாடமியின் Motion picture of Arts and sciences குழுவில் உறுப்பினராக சேர ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 57 நாடுகள் உள்ள 487 திரைத்துறை பிரபலங்களுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பிதழ் அனுப்பி கௌரவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இயக்குநர் ராஜமௌலி, ஆடை வடிமைப்பாளர் ரமா, நடிகை ஷபனா ஆஸ்மி உள்ளிட்ட இந்திய திரையுலக நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
Similar News
News November 22, 2025
சூப்பர் ஓவரில் சூப்பராக சொதப்பிய இந்திய அணி..!

ரைசிங் ஸ்டார் ஆசியக் கோப்பை அரையிறுதியில் சூப்பர் ஓவர் வரை சென்று <<18351704>>இந்திய அணி தோல்வி<<>> அடைந்துள்ளது. பெரும் சோகம் என்னவென்றால், சூப்பர் ஓவரில் இந்தியா (0) ரன் எதுவுமே எடுக்கவில்லை. முதல் 2 பந்துகளில் (ஜிதேஷ், அஷுதோஷ்) 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டனர். இதனையடுத்து, களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது. ஆனால், பவுலர் சுயாஷ் சிங் அடுத்த பந்தை வைட் ஆக வீசியதால் வங்கதேசம் வென்றது.
News November 22, 2025
ஓவர் டைம் வேலை செய்தால் டபுள் சம்பளம்… புதிய சட்டம்

இன்று அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின் படி: *பெரும்பாலான துறைகளில் பணிநேரம் 8 -12 மணிநேரம் வரை, வாரத்துக்கு 48 மணிநேரம் மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் நேரம் (ஓவர் டைம்) வேலை செய்தால் இருமடங்கு சம்பளம், தேவைப்படும் சூழலில் தொழிலாளரிடம் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறுவது கட்டாயம் *ஊதியம், பணி நேரம் உள்ளிட்ட விதிகள் இனி டிஜிட்டல் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
News November 22, 2025
ராசி பலன்கள் (22.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


