News January 20, 2025

பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவு

image

கடந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடலில் பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை கண்டறியும் வகையிலும், சரி செய்யும் வகையிலும் அனைத்துப் பள்ளிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் என 805 குழுக்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News August 25, 2025

தங்கம் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனிங்க..!

image

உலகிலேயே தங்கம் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தங்கத்தின் விலை கூடினாலும் அதன் மீதான மவுசு குறையவில்லை. இந்நிலையில், நீங்கள் தங்கம் வாங்கும்போது இந்த விசயங்களை மறக்காம நோட் பண்ணுங்க. *BIS முத்திரையை கட்டாயம் பாருங்க. முக்கோண வடிவிலான இந்த முத்திரை இருந்தால் அது தரமான தங்கம். *Hallmark Unique Identification (HUID) கோடு, *<>Bill & GST எண்<<>>, *சரியான எடை இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.

News August 25, 2025

இந்தியாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

image

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு மற்றொரு தங்கம் கிடைத்துள்ளது. மகளிர் ட்ராப் ஷூட்டிங் இறுதிப்போட்டியில் நீரு தண்டா 43 முறை இலக்கை துல்லியமாக சுட்டு தங்க பதக்கத்தை வசப்படுத்தினார். இதே போட்டியில் இந்தியாவின் ஆஷிமா வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா 28 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் முதலிடத்தில் தொடர்கிறது.

News August 25, 2025

கட்சியில் இருந்து கூண்டோடு விலகல்

image

கரூரில் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியது தேமுதிகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர் <<17504956>>அரவை முத்து<<>>, அதிமுகவில் இணைந்த நிலையில், அவரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். மாவட்ட அவை தலைவர் ரங்கநாதன், குளித்தலை நகரச் செயலாளர் சுப்பிரமணியன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கடவூர் ஒன்றிய செயலாளர் ஆல்வின் உள்ளிட்ட 200 பேர் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.

error: Content is protected !!