News August 28, 2025

பள்ளிகளில் ஆதார் முகாம்கள் நடத்த உத்தரவு

image

பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 – 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்கப்பட உள்ளது.

Similar News

News March 25, 2026

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

image

முன்னாள் ஈரான் ராணுவ தளபதி மொஹ்சென் ரெஸாயி, ‘எங்கள் உள்கட்டமைப்பு தாக்கப்பட்டால், கண்ணுக்குக் கண் அல்ல தலை’ என்ற கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். வளைகுடாவில் உள்ள அமெரிக்கக் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் என்றும் தடைகள் நீக்கப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட்டால் மட்டுமே மோதல்கள் நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவைக் காப்பாற்ற அதிக நேரம் இல்லை என்றும் எச்சரித்தார்.

News March 25, 2026

நம்மிடம் அவசர கால இருப்பு 9.5 நாட்களுக்கு மட்டுமே

image

இறக்குமதியில் தடை ஏற்பட்டால் நமது அவசர கால கச்சா எண்ணெய் கையிருப்பு 9.5 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூலோபாய பெட்ரோலியக் கிடங்கில் 33.72 லட்சம் மெட்ரிக் டன் எண்ணெய் சேமிப்பில் உள்ளதாகவும், இந்த இருப்புக்கள் விசாகப்பட்டினம், மங்களூர் மற்றும் படூர் ஆகிய இடங்களில் இருப்பதாகவும் கூறியுள்ளது. RTI மூலம் இந்தியா டுடே கேள்விக்கு பதிலளித்துள்ளது.

News March 25, 2026

போர்.. பீர் பிரியர்களுக்கு அதிர்ச்சி!

image

நாட்டில் பீர் விலைகள் உயரும் என்றும், விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் இந்திய பீர் உற்பத்தியாளர்கள் சங்கம் (BAI) தெரிவித்துள்ளது. போர் காரணமாக உற்பத்திச் செலவு 12-15% அதிகரித்துள்ளதாகவும், சில மாநிலங்களில் உற்பத்திச் செலவை விட விலைகள் குறைவாக உள்ளதாகவும் கூறியுள்ளது. பாட்டில் விலைகள் 20%, மூலப்பொருட்களின் விலை 20-25%, மற்றும் போக்குவரத்துச் செலவுகள் 10% அதிகரித்துள்ளன.

error: Content is protected !!