News December 7, 2024

தமிழகம் முழுவதும் குடிநீர் பரிசோதனை செய்ய உத்தரவு

image

தமிழகம் முழுவதும் குடிநீரின் மாதிரிகளை பரிசோதித்து அறிக்கை அளிக்க, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சுழற்சி முறையில் தினமும் 10 குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குடிநீர் மாதிரியை பரிசோதிக்கவும், 100% சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

ஒரேநாளில் ₹30,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

1 கிராம் வெள்ளி இன்று (மார்ச் 5) மாற்றமின்றி ₹295-க்கும், 1 கிலோ ₹2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இம்மாத தொடக்கத்தில் 1 கிலோ வெள்ளி ₹3.25 லட்சமாக இருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் ₹30,000 அளவுக்கு குறைந்து ₹2.95 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாள்களிலும் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 5, 2026

ஹோட்டல் பணிப்பெண் தவறாக நடந்த பாகிஸ்தான் வீரர்!

image

PAK கிரிக்கெட் வீரர் ஒருவர் மோசமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். இலங்கையின் கண்டி பகுதியில் T20I WC-க்காக தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், ஹோட்டல் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. அச்சத்தில் அப்பெண் கத்தி கூச்சலிட்டதில், ஹோட்டல் ஊழியர்கள் அவரை மீட்டதாக கூறப்படுகிறது. அந்த வீரர் சார்பில் அவரது மேனஜர் மன்னிப்பு கேட்டாலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

சற்றுமுன்: நடிகை லதா அதிமுகவில் இணைந்தார்

image

பிரபல நடிகை லதா, EPS முன்னிலையில் சற்றுமுன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்ஜிஆர் கட்சித் தொடங்கிய போதே 3-வது பெண் உறுப்பினராக அதிமுகவில் இணைந்தவர். ஜெ., மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக உடைந்தபோது, கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். நல்ல பேச்சாற்றல் கொண்ட அவரை, வரும் தேர்தலில் மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது..

error: Content is protected !!