News November 24, 2024
திமுகவினருக்கு உதயநிதி போட்ட ஆர்டர்..!

திமுகவினருக்கு உதயநிதி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். திருச்சியில் நடந்த கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. வெற்றி என்பது தெரிந்ததுதான். ஆனால், எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறோம் என்பதுதான் விஷயம். 200 தொகுதிகளை நாம் கைப்பற்றியே ஆக வேண்டும். அதில் எந்த சமரசமும் இல்லை. எனவே தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள் என உத்தரவிட்டார்.
Similar News
News December 28, 2025
அன்று கோடீஸ்வரர்.. இன்று Rapido டிரைவர்!

ஒருகாலத்தில் கோடிகளில் புரண்டவரை Rapido டிரைவராக மாற்றியுள்ளது விதி. கொரோனா காலக்கட்டத்தில் ₹14 கோடி இழந்தவர், இன்று பிழைப்புக்காக பைக் ஓட்டுகிறார். அவர் தனது கதையைக் கூறியபோது, கலங்கிய அவரது கண்கள் அந்தப் பயணியையும் நெகிழ வைத்துள்ளன. வாழ்க்கை போராட்டமாக மாறினாலும், ‘இன்னும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. தோல்வியை ஏற்க மாட்டேன்’ என அவரின் வார்த்தைகள், வாழ்க்கை மீது நமக்கும் நம்பிக்கை கொடுக்கிறது.

மாரடைப்பு ஆபத்தை தடுக்க இதை சாப்பிடுங்க (PHOTOS)

முன்பெல்லாம் மாரடைப்பு என்றால் வயதானவர்களுக்கு தான் வரும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய பரபரப்பான சூழலில் இளைஞர்களும் இதன் பிடியில் சிக்கி வருகின்றனர். முறையற்ற உணவு முறையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உங்கள் இதயத் துடிப்பை வாழ்நாள் முழுவதும் சீராக வைத்திருக்க உதவும் சில முக்கியமான உணவுகள் எவை என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க. SHARE பண்ணுங்க.