News August 2, 2024
மலை மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க ஆணை

வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நீலகிரி, திண்டுக்கல் உள்பட 8 மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், மழை நாள்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அவசர தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், மழை நேரத்தில் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை துறை இணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
டெல்லி காற்று மாசு: பிரியங்கா ஆவேசம்!

டெல்லி காற்று மாசுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பேட்டியளித்த பிரியங்கா காந்தி, குழந்தைகள், முதியவர்கள் மூச்சு விடவே சிரமப்படுவதாக தெரிவித்தார். ஒருவரையொருவர் குறை சொல்ல இது வெறும் அரசியல் பிரச்னை அல்ல என்று கூறிய அவர், வெறும் அறிக்கைகளை மட்டும் விடாமல், சரியான நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சிகளும் துணை நிற்போம் என்று குறிப்பிட்டார்.
News December 4, 2025
சாலைகளை காணவில்லை: ஆர்.பி.உதயகுமார்

பருவமழையால் மதுரையில் ரோட்டையும் காணவில்லை, மேயரையும் காணவில்லை என ஆர்.பி.உதயகுமார் பதிவிட்டுள்ளார். வரும் 7-ம் தேதி CM ஸ்டாலின் மதுரைக்கு செல்வதை மேற்கோள்காட்டிய அவர், மண்டல தலைவர்களையும், மதுரையின் சாலைகளையும் CM கண்டுபிடித்து தருவாரா என கேட்டுள்ளார். மேலும், விளம்பர வெளிச்சம் தேடுவதற்கு பதிலாக, மதுரைக்கு பயனுள்ள நலத்திட்டங்களை வழங்குவதற்கு CM நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News December 4, 2025
தூர்தர்ஷன் தலைவர் ராஜினாமா!

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கும், பிரசார் பாரதியின் தலைவராக இருந்த நவ்நீத் குமார் செகல், ராஜினாமா செய்துள்ளார். 4 ஆண்டுகளாக காலியாக இருந்த தலைவர் பதவியில், அவர் மார்ச், 2024-ல் பொறுப்பேற்றார். ஆனால், 2 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் பதவி விலகியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், அவரது ராஜினாமாவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.


