News March 20, 2024
ரேஷன் கார்டு வழங்க உத்தரவு

இ-ஷ்ரம் தளத்தில் பெயர் பதிவு செய்துள்ள 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்படாததால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 மாதங்களுக்குள் கார்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை உடனே வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 15, 2026
இந்தியா Vs பாகிஸ்தான்.. டாப் 5 சம்பவங்கள்

இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் 8 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ள நிலையில், இந்தியா 7 முறை வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் இந்திய வீரர்களின் தரமான சம்பவங்களையும், மறக்க முடியாத தருணங்களையும் போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை மேலே SWIPE செய்து பார்க்கவும்.
News February 15, 2026
இது CM ஸ்டாலினின் ராஜதந்திரம்: திருமா

தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கக்கூடாது என்று சங்பரிவார் கும்பல் SC-ஐ அணுகிய நேரத்தில், மகளிருக்கு ₹5,000 வழங்கப்பட்டது பாஜகவுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது மகளிர் மேம்பட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், திமுகவுக்கு எதிரான தகுதியான கூட்டணி இதுவரை அமையவில்லை என்றும் கூறினார்.
News February 15, 2026
விஜய்யை ஆட்டுவிக்கிறதா ஆந்திரா?

ஆந்திர Ex CM ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண நிகழ்வில் விஜய் பங்கேற்றார். அப்போது, தேவையில்லாமல் பாஜகவை சீண்ட வேண்டாம், மாநில தேர்தல் என்பதால் திமுகவை மட்டும் எதிர்த்து அரசியல் செய்யுங்கள் என ஜெகன் கூறினாராம். இதனால்தான், சேலத்தில் பேசிய விஜய், சட்டப்பேரவை தேர்தல் என்பதால் மக்களால் டெலிட் செய்யப்பட்டவர்கள் பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருக்குமோ?


