News March 18, 2024
ஐ.பெரியசாமி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 2006-11ல் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்து வரும் நிலையில், அதற்கு தடை விதிக்குமாறு முறையிடப்பட்டது. அதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.
Similar News
News December 12, 2025
ரஜினியை வாழ்த்திய நட்சத்திரங்கள்.. (PHOTOS)

1950-ல் பிறந்து, 50 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி நினைவு கூர்ந்துள்ளனர். திரைநட்சத்திரங்கள் பகிர்ந்த அரிய போட்டோஸை மேலே SWIPE செய்து பார்க்கவும்..
News December 12, 2025
வெற்றி பெற வித்தை செய்யணும்: அண்ணாமலை

2026 தேர்தலில் 3-வது அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக மேலும் வளர்ச்சி பெற இன்னும் பல வித்தைகளை செய்ய வேண்டும் என்றார். ஒவ்வொரு கட்சியும் தங்களின் இடத்தை தக்க வைக்கவும், முன்னேறவுமே முயற்சிப்பார்கள் என்றார். அமித்ஷா உள்ளிட்டோருடன் மூடிய அறையில் பேசியதை வெளியில் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
News December 12, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீருடன் இரங்கல்

கிளிகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>’பறவை மனிதர்’<<>> ஜோசப் சேகரின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த இந்த மாமனிதரின் இறுதிக்காலம் மகிழ்ச்சியாக அமையவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோசப் சேகர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது இழப்புக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


