News December 6, 2024
அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

பள்ளிகளில் NGOக்கள் செயலாற்ற விரும்பினால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில அளவிலான குழுக்கள் அமைக்கும் பட்டியலில் உள்ள NGOக்களின் உதவிகளை மட்டுமே பள்ளிகள் நாட வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. போலி NCC உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 16, 2025
மயிலாடுதுறை: குளத்தில் சடலம் மீட்பு

தர்மதானபுரம், ஆத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள சாவடி குளத்தில், (40) வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, வைத்தீஸ்வரன் கோயில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்தது யார், எந்த ஊரை சேர்ந்தவர், இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 16, 2025
ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.
News December 16, 2025
இன்று தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்!

தளபதி கச்சேரி பாடலுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ அப்டேட் இன்றி விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 2-வது பாடல் ரிலீஸ் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. 10 நாள்களில் இசை வெளியீடு விழா, டிரெய்லர் ரிலீஸ், படக்குழுவினரின் நேர்காணல் என அடுத்தடுத்து அப்டேட் வரவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.


