News April 24, 2024
பேருந்துகளில் தானியங்கிக் கதவு பொருத்த உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிப்பதைத் தவிர்க்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், எத்தனை பேருந்துகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன? என்ற தகவலைத் தெரிவிக்க உள்துறை, போக்குவரத்துத் துறைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.09) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (மார்ச்.9) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 10, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க


