News April 24, 2024

கேசிஆர் மகள் ஜாமின் மனு மீது மே 2இல் உத்தரவு

image

சந்திரசேகர் ராவின் மகள் கவிதா ஜாமின்கோரித் தாக்கல் செய்த மனு மீது மே 2ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மதுபானக் கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து சிபிஐ அமைப்பும் வழக்குப்பதிந்து கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமின்கோரிக் கவிதா தாக்கல் செய்த மனு மீது மே 2இல் உத்தரவு பிறப்பிக்கப்படுமென டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Similar News

News November 12, 2025

V-ல் ஆரம்பமாகும் அழகிய நகரங்கள்

image

இந்தியாவில் பல அழகிய நகரங்கள் உள்ளன. அதில், தனக்கென ஒரு கதை, தனித்துவமான அழகு மற்றும் கலாச்சார வசீகரத்தைக் கொண்டுள்ள சில நகரங்களின் பெயர்கள் ‘V’ என்ற எழுத்தில் தொடங்குகின்றன. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு மிகவும் பிடித்த நகரம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 12, 2025

கவர்னர் மாளிகை தாக்குதல்: 10 ஆண்டுகள் சிறை

image

கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த பூந்தமல்லி NIA கோர்ட், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ₹5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

News November 12, 2025

டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டருக்கு தொடர்பா?

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் பல டாக்டர்கள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு டாக்டரும் சிக்கியுள்ளார். ஸ்ரீநகரின் SMHS ஹாஸ்பிடலில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் நிசார் உல் ஹசன், கடந்த 2023-ல் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக J&K அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டார். Al-Falah பல்கலை.,-யில் வேலை பார்த்து வந்த இவர், கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு மாயமாகியுள்ளார்.

error: Content is protected !!