News March 27, 2024
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நடவடிக்கை விவரங்களை வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனுவில், அதிகாரிகள் மீது துறை ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அவருக்கு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஏப்.25க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News August 11, 2025
இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

இந்தியாவுடனான மோதலுக்கு பின் 2-வது முறையாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் அமெரிக்கா சென்றுள்ளார். இதனிடையே, இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அணு ஆயுதத்தை வைத்து பாதி உலகையே அழித்து விடுவோம் என அசிம் முனிர் எச்சரித்துள்ளார். சிந்து நதியில் இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம் என கூறிய அவர் கட்டிய பின் ஏவுகணைகளால் அதை அழித்துவிடுவோம் என தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
BREAKING: தங்கம் விலை ₹560 குறைந்தது

கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று தலைகீழாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹75,000-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹9,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹-1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News August 11, 2025
EC நீதிமன்றம் அல்ல: ப.சிதம்பரம் காட்டம்

புகார்களை கையாள்வதில் தேர்தல் ஆணையம்(EC), நீதிமன்றம் போல் செயல்பட முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தும் பொறுப்புமிக்க நிர்வாக அமைப்புதான் EC என்றும் கூறியுள்ளார். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரை நிராகரிக்க முடியாது என தெரிவித்த அவர் கட்சிகளுக்கும் வாக்காளர்களுக்கும் EC கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.