News April 28, 2024
மே 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட்

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மே 1ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். இந்த நிலையில், இன்று முதல் மே 1 வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 1ஆம் தேதி வழக்கத்தை விடக் கூடுதலாக அனல் காற்று வீசும் எனக் கூறியுள்ளது.
Similar News
News January 27, 2026
தொப்பியின் விலை ₹4.2 கோடி!

ஆஸி. ஜாம்பவான் டான் பிராட்மேனின் தொப்பி ₹4.2 கோடிக்கு லாயிட்ஸ் கோல்ட் கோஸ்ட் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு தன்னுடைய தொப்பியை பிராட்மேன் பரிசாக அளித்தார் . ‘DG பிராட்மேன்’ & ‘SW சோஹோனி’ பெயர்கள் பொறிக்கப்பட்ட இத்தொப்பி, கடந்த 2024-ம் ஆண்டில் ஏலம்போன அவரது மற்றொரு தொப்பியை (₹2.63 கோடி) விட அதிக விலைக்கு சென்றுள்ளது.
News January 27, 2026
என்னை வம்புக்கு இழுக்காதீர்: தளபதிக்கு ஜோதிமணி WARNING

‘ஆட்சியில் பங்கு’ என பேசி வரும் ஜோதிமணிக்கு சீட் கொடுக்க கூடாது என்று திமுக <<18969847>>MLA தளபதி <<>>கூறியிருந்தார். இந்நிலையில், தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது; களத்தில் நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதி அனுசரித்துப் போகிறோம், அமைதி காக்கிறோம். இதுபோன்று பேசி, CM ஸ்டாலினை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது என ஜோதிமணி எச்சரித்துள்ளார்.
News January 27, 2026
ஆட்டம் போடும் பொம்மையாக அதுல்யா ரவி

நடிகை அதுல்யா, கடற்கரையில் ஆடும் சூரியன் போன்ற தனது லேட்டஸ்ட் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில், அவரது புன்னகை பூக்கும் பூக்களாக நேசிக்க வைக்கிறது. வானில் மறையும் வானவில்லின் வண்ணமாய் இருக்கிறார். இதயத்தை கொள்ளும் மௌனம் மீட்கும் பார்வையால், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


