News August 7, 2025

ஆரஞ்ச் அலர்ட்.. 12 மாவட்டங்களில் கனமழை: IMD

image

தமிழகத்தில் சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், மேலும் 3 நாள்களுக்கு மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News March 11, 2026

காணாம போயிடுவீங்க டிரம்ப்: கடுமையாக எச்சரித்த ஈரான்

image

ஹார்முஸ் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை தடுத்தால் ஈரானை 20 மடங்கு கடுமையாக தாக்குவோம் என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி, ’டிரம்பை விட வலிமையானவர்களால் கூட ஈரானை எதுவும் செய்ய முடியவில்லை. கவனமாக பேசுங்கள் டிரம்ப் இல்லையெனில் காணாமல் போவீர்கள்’ என்றும் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 11, 2026

தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

image

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக, டெல்லியில் CEC ஞானேஷ் குமார் இன்று ஆலோசனை செய்கிறார். இதனைத் தொடர்ந்து, 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை மார்ச் 15-ல் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News March 11, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <>இந்த படிவத்தை கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!