News December 9, 2024
தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்திற்கு வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 11ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் 12ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும்.
Similar News
News September 13, 2025
யார் இந்த சுஷிலா கார்கி?

நேபாளின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள சுஷிலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் PM ஆவார். * இவர் 2016-ல் நேபாள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக செயல்பட்டவர். * பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவர். * 1990-ல் சிறை தண்டனை அனுபவித்தவர். * நேபாளில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு குடியுரிமை தருவது தொடர்பான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியவர்.
News September 13, 2025
FIRST LOVE: மறக்க முடியாமல் தவிக்கும் ஆண்கள்

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பெரும்பாலானோர் இன்னமும் தங்கள் முதல் காதலை நினைத்துக் கொண்டிருப்பதாகவும், 10-ல் 4 பேர், சமூக வலைதளங்கள் உதவியுடன் மீண்டும் முதல் காதலோடு தொடர்புகொண்டு (அ) இணைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 10-ல் 4 பேரில் குறிப்பாக ஆண்கள் இன்னும் பழைய காதல் நினைவுகளை சுமப்பதாகவும் பதிலளித்துள்ளனர். உங்களுக்கு எப்படி?
News September 13, 2025
லோகேஷ் – அமீர்கான் படம் கைவிடப்பட்டதா?

லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் இணைந்து பணியாற்றவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சித்தாரே ஜமீன் பர்’ பட நிகழ்ச்சியில் அமீர்கான், லோகேஷ் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறினார். ஆனால் தற்போது கமல் – ரஜினி படம், கைதி 2-ல் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார். அமீர்கான் உடனான படம் கைவிடப்பட காரணம் என்ன? தேதிகள் பிரச்னையா என உறுதியான தகவல் தெரியவில்லை.