News August 17, 2024
நெல்லைக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நீடிப்பின் காரணமாகவும் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று(ஆக.,17) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
Similar News
News December 2, 2025
நெல்லை: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

நெல்லை மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த <
News December 2, 2025
நெல்லை: 80 லட்சம் பண மோசடி!

நெல்லை, அம்பாசமுத்திரத்தை சேர்ந்த மென் பொறியாளரிடம் இணையவழி முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 80 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலம் வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கப்பட்டு, இரண்டு மாதங்களில் பணத்தை இழந்தார். முதலீட்டை திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டதால், அவர் திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
News December 2, 2025
நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாள் கோயிலில் கார்த்திகை மாத மூன்றாம் சோமவார தினத்தை முன்னிட்டு நேற்று தாமிர சபையில் வைத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


