News April 11, 2024

நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

image

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் வேளையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 30, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: சொல்வன்மை
▶குறள் எண்: 648
▶குறள்: விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
▶பொருள்: வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்.

News March 30, 2026

சமயபுரம் துயரம்.. திமுக அரசை சாடிய அண்ணாமலை

image

சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து பக்தர் உயிரிழந்தது கவலையளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். அங்கு கும்பாபிஷேக பணிகள் முடிந்து 4 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், மேற்கூரை இடிந்து விழுவது எந்த லட்சணத்தில் ஆலய திருப்பணிகளை திமுக அரசு மேற்கொள்கிறது என்பதற்கு உரிய சான்று என X-ல் அவர் விமர்சித்துள்ளார். இதில், பக்தர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிய சேகர்பாபு, பதில் சொல்லி ஆக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 30, 2026

US வீரர்கள் சுறாவுக்கு இரையாக மாறுவார்கள்: ஈரான்

image

போர்க்களத்தில் டிரம்ப்பை ஒரு பகடைக்காயாக இஸ்ரேல் PM நெதன்யாகு பயன்படுத்தி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. எப்ஸ்டீன் பைல்ஸில் டிரம்ப் சிக்கி உள்ளதால், அவருக்கு மொசாட் அமைப்பு அழுத்தம் கொடுப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. தரைப்படையை அனுப்பி சில தீவுகளை கைப்பற்றுவேன் என டிரம்ப் கூறும் நிலையில், அவ்வாறு நடந்தால் பாரசீக வளைகுடாவில் US வீரர்கள் சுறாவுக்கு இரை ஆவார்கள் என்றும் ஈரானிய படைகள் எச்சரித்துள்ளன.

error: Content is protected !!