News August 5, 2024

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வாய்ப்பு

image

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மாவட்ட சுகாதார இயக்குநர்கள், பள்ளி மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பெயர் விடுபட்டிருந்தால் மாணவர்கள் வாயிலாக பெற்றோருக்கு தகவலளித்து பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News March 23, 2026

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் இவரா?

image

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி குறித்த Ex வீரர் ஸ்ரீகாந்தின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், MI அணியில் டி20 WC வென்ற ரோஹித் சர்மா & சூர்யகுமார் யாதவ் என்ற 2 கேப்டன்கள் உள்ளனர்; ஆனால், அவர்கள் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறார்கள் என விமர்சித்துள்ளார். ஹர்திக் நல்ல கேப்டன்தான், ஆனால் அப்பொறுப்பை சூர்யாவிடம் விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News March 23, 2026

கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி.. மத்திய அரசின் ஹேப்பி நியூஸ்

image

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <>PMMVY<<>>-ல் விண்ணப்பியுங்கள். SHARE.

News March 23, 2026

2 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, <<19433149>>தென்காசி, நெல்லை<<>> மாவட்டங்களில் ஏப்.1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்.1-ம் தேதி முழு ஆண்டு தேர்வும் தொடங்கவிருப்பதால் பள்ளி மாணவர்களிடையே சற்று குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT

error: Content is protected !!