News August 11, 2025

BJP நட்பை விரும்பாத OPS.. விஜய்யுடன் கூட்டணியா?

image

தமிழகம் வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷை சந்திக்க வருமாறு OPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பை அவர் தவிர்த்துவிட்டு, சொந்த ஊரிலேயே தங்கிவிட்டாராம். BJP மீது அதிருப்தியில் இருந்த அவருடன் TTV சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், OPS தரப்பு பாஜகவுடன் மீண்டும் இணைவதை விரும்பவில்லையாம். அதுமட்டுமல்லாமல், கூட்டணி மாறும் (விஜய்) முடிவில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News

News August 11, 2025

புதிய வாரிசை களமிறக்கிய ராமதாஸ்

image

ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியதால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. இந்நிலையில், அன்புமணிக்கு பதிலாக ராமதாஸ் புதிய வாரிசை அரசியலில் களமிறக்கியுள்ளார். நேற்று நடந்த பாமக மகளிர் மாநாட்டில் ராமதாஸுடன் மகள் காந்திமதியும் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல், ராமதாஸின் மகள் வழிப்பேரன் முகுந்தனின் சகோதரர் சுகுந்தனும் பங்கேற்றது அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.

News August 11, 2025

SPORTS ROUNDUP: ஈட்டி எறிதலில் IND வீராங்கனை முதலிடம்!

image

◆உலக தடகள கான்டினென்டல் டூர்: ஈட்டி எறிதலில் IND வீராங்கனை அன்னு ராணி முதலிடம்.
◆2வது ODI: 37 ஓவரில் PAK 171/7 எடுத்த போது மழை குறுக்கிட்டது. 181 டார்கெட்டை துரத்திய WI, 33.2 ஓவரில் 184/5 எடுத்து வெற்றி.
◆சின்சினாட்டி ஓபன்: சபலென்கா(பெலாரஸ்) & ரிபாகினா(கஜகஸ்தான்) 3வது சுற்றுக்கு முன்னேற்றம்.
◆IPL 2026: தமிழக வீரர்கள் RS. அம்ப்ரிஷ் & இசக்கி முத்து ஆகியோரை தேர்வுக்கான சோதனைக்கு அழைத்துள்ளது CSK.

News August 11, 2025

கூலி படத்தில் SK?

image

ரிலீசுக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், ‘கூலி’ படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் LCU கனெக்‌ஷனாக புது ரோலில் SK நடித்துள்ளதாகவும் சில நாள்களாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. ஆனால், தற்போது வெளிவரும் செய்திகளின் படி, SK இந்த படத்தில் நடிக்கவில்லையாம். ‘கூலி’ கதைக்கு முன்பு ரஜினியிடம் லோகேஷ் சொன்ன Fantasy கதையில்தான், SK நடிப்பதாக இருந்ததாம்.

error: Content is protected !!