News August 8, 2024
தங்க மகனாக மாறிய ஓபிஎஸ்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும், அவர்கள் கட்சியினரால் தனி பெயருடன் அழைக்கப்படுகின்றனர். இதுபோல், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை, அவரின் பத்திரிகையில் தங்க மகன் என்று குறிப்பிட்டே செய்தி வருகிறது. அதாவது, அவர் அறிக்கை வெளியிட்டாலும், பேட்டியளித்தாலும் தங்க மகன் ஓபிஎஸ் என்று குறிப்பிட்டு செய்திகள் வருகிறது. இதைக்கண்ட அதிமுகவினர் கேலி கிண்டல் செய்கின்றனர்.
Similar News
News August 23, 2025
ரஜினி வரலாற்றில் முதல்முறை… குவியும் ‘கூலி’ வசூல்

ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ‘கூலி’ படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேகமாக இந்த சாதனையை படைத்த ரஜினி படம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், எந்திரன் பட இந்தி பதிப்பு வசூலை (₹23.84 கோடி) இந்த படம் எட்டே நாள்களில்(₹26.02 கோடி) முறியடித்துள்ளதாம். ரஜினி கரியரில் அதிகம் வசூலித்த ‘2.0’, ‘ஜெய்லர்’ ஆகிய படங்களின் வசூலை ‘கூலி’ முந்துமா?
News August 23, 2025
SPACE: பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன ஆகும்?

பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ஈர்ப்பு விசையின்றி மனிதர்கள் தூக்கி வீசப்படுவார்கள்
பூமியின் ஒரு முனையில் எப்போதும் வெயில், மற்றொரு முனையில் குளிர் நிலவும். இதனால் உயிரினங்கள் இறக்கும்
சூரியன் இன்றி தாவரங்கள் வளராது. உணவு தட்டுப்பாடு ஏற்படும்
சுனாமி, பூகம்பங்கள் உருவாகும்
மொத்தத்தில் உயிரினங்கள் வாழ தகுதியற்ற கோளாக பூமி மாறும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
News August 23, 2025
தவெக தொண்டர்கள் 3 பேர் மரணம்.. விஜய் இரங்கல்

மதுரை மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்த அக்கட்சியின் தொண்டர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன், நீலகிரியை சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜ் ஆகியோரின் மறைவு மன வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்து காட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.