News August 12, 2025
திமுகவில் இணைந்த OPS அணி மா.செ., ஆயில் ரமேஷ்!

கரூர் மேற்கு மாவட்ட அதிமுக(OPS அணி) செயலாளர் ஆயில் ரமேஷ் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அதேபோல், அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரண்ராஜ், கவின், சிவபாலன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் மாற்றுக் கட்சியினர் பலரையும் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்து வருகிறார்.
Similar News
News August 13, 2025
FASTag பாஸ்: அப்ளை செய்யும் முறை

வரும் 15-ம் தேதி முதல் <<17363704>>FASTag<<>> பாஸ் கிடைக்கும். இதை ‘Rajmarg Yatra’ என்ற மொபைல் ஆப் அல்லது NHAI இணையதளத்தில் விண்ணப்பித்து பெறலாம். உங்கள் வாகன எண் / பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பயன்படுத்தி லாக்-இன் செய்யவும். பின், ₹3,000 கட்டணம் செலுத்தவும். அதன்பின், உங்களின் இப்போதைய FASTag உடன் இதை லிங்க் செய்துகொள்ளவும். இதை செய்யும்போது, உங்களின் பழைய FASTag ஆக்டிவாக இருக்க வேண்டியது அவசியம்.
News August 13, 2025
தண்ணீரை அதிகம் செலவழிக்கும் AI?

ChatGPT-ல் ஒரு கேள்விக் கேட்டால், நொடியில் பதில் சொல்கிறது. சிம்பிளா இருந்தாலும் இந்த AI-யின் பின்னணி சிக்கலானது. தினம் கோடிக்கணக்கான கேள்விகளை பிராசஸ் செய்ய, தகவல்கள் சேமிக்க மாபெரும் டேட்டா மையங்கள் தேவை. இவற்றுக்கு அபரிமிதமான மின்சாரம் தேவை. இந்த (நீர்)மின்சாரம் தயாரிக்க தண்ணீர் தேவை. அவ்வகையில், உங்களின் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல 10 ml தண்ணீர் செலவாகிறதாம். பார்த்து கேள்வி கேளுங்க மக்களே.
News August 13, 2025
முதல் மனைவியுடன் மாதம்பட்டி.. குழப்பமா இருக்கே?

மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில் 2-வது திருமணம் செய்தது சர்ச்சையானது. முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே அவர் 2-வது திருமணம் செய்திருப்பதாகவும், முதல் மனைவி கோர்ட்டை நாடவுள்ளதாகவும் செய்திகள் பரவின. இந்நிலையில், தனது முதல் மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது. இதனால், 2-வது மனைவியுடன் சண்டையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்னவா இருக்கும்?