News March 16, 2025

செங்கோட்டையனை புகழ்ந்த ஓபிஎஸ் மகன்

image

கொங்கு நாட்டின் தங்கம் செங்கோட்டையன் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பாராட்டியுள்ளார். செங்கோட்டையனுடைய மனசாட்சி உணர்வு தற்போது வெளிப்படத் துவங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் என்றும், தனது அரசியல் வழிகாட்டிகளில் அவரும் ஒருவர் எனவும் ஜெயபிரதீப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar News

News March 16, 2025

நடிகை ‘பிந்து கோஷ்’ காலமானார்

image

பல நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நடிகை பிந்து கோஷ், சென்னையில் காலமானார். 1982ஆம் ஆண்டு வெளியான ‘கோழி கூவுது’ படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர், தென்னிந்திய மொழிப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். விமலா என்ற இயற்பெயர் கொண்ட இவர், களத்தூர் கண்ணம்மா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர், ரஜினி, சிவாஜி ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

News March 16, 2025

திமுகவுக்கு ஆதரவாக பேசிய பிரேமலதா

image

திமுக அரசை கடுமையாக எதிர்த்து வந்த பிரேமலதா, தற்போது ஆதரவு கருத்துகள் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பட்ஜெட்டை வரவேற்பதாக கூறியிருக்கும் அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசுடன் தேமுதிக இணைந்து போராடும் என்றும் கூறியுள்ளார். இதனால், அரசியலில் காற்றின் திசை திரும்புகிறதா என்று விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். உங்கள் கருத்து என்ன?

News March 16, 2025

இங்கிலாந்து டெஸ்டுக்கும் ரோஹித்தே கேப்டன்?

image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் சர்மாவே கேப்டன் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆஸி. தொடரில் மோசமாக விளையாடியதால் விமர்சனத்துக்கு அவர் ஆளானார். இதனால் கடைசி டெஸ்டில் அவர் விளையாடவில்லை. விரைவில் தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் அவர் கேப்டனா, இல்லையா என கேள்வியெழுந்தது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ வட்டாரங்கள், கேப்டன்ஷிப்பில் எந்த மாற்றமும் இருக்காது எனக் கூறின.

error: Content is protected !!