News April 18, 2025
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் OPS

தமிழக முன்னாள் முதல்வர் OPS, கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி அங்கே வந்த அவர், இரண்டு நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வாரத்திற்கும் மேல் தங்கியிருந்து சிகிச்சை பெற்று இன்று அவர் தேனி புறப்பட்டுச் சென்றார்.
Similar News
News January 10, 2026
₹35,000 சம்பளம்.. 764 காலிப்பணியிடங்கள்: APPLY

DRDO-வில் சீனியர் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீஷியன் பிரிவுகளில் காலியாக உள்ள 764 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி வாய்ப்பாகும். டிப்ளமோ, BSc, BLSc, MLSc, 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சீனியர் டெக்னிக்கல் உதவியாளருக்கு ₹35,000, டெக்னீஷியனுக்கு ₹19,900 சம்பளமாகும். 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். 18 – 28 வயதுக்கு உட்பட்டவர்கள், <
News January 10, 2026
சற்றுமுன்: ஹரி நாடார் அதிரடி கைது

தொழிலதிபர் ஒருவருக்கு ₹35 கோடி கடன் வாங்கித் தரும் பொருட்டு, காசோலையை சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் வழங்கியுள்ளார். இதற்காக ₹70 லட்சம் கமிஷனும் அவர் பெற்றுள்ளார். ஆனால், காசோலை போலியானது என தெரியவர, இதுகுறித்து தொழிலதிபர் போலீஸில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, மோசடி தொடர்பாக ஹரி நாடார் & அவரது கூட்டாளி பாலு ஆகியோரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
News January 10, 2026
விஜய் படங்களுக்கு இதுவரை ஏற்பட்ட தடைகள்

‘ஜன நாயகன்’ தொடர்பான வழக்கு ஜன.21-க்கு ஒத்திவைக்கப்பட்டதால், படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது. இது படத்தை வரவேற்க தயாராக இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், ‘இதற்கு முன்பே நாங்கள் தளபதி படங்களின் பல்வேறு தடைகளை பார்த்தவர்கள்’ என கூறுகின்றனர். இதுபோல விஜய் படங்களுக்கு ஏற்பட்ட தடைகளை மேலே உள்ள போட்டோஸை swipe செய்து பாருங்கள். உங்கள் கருத்தை கமெண்ட்டில் கூறுங்கள்.


