News June 10, 2024
கேள்விக்குறியாக மாறிய ஓபிஎஸ் அரசியல் எதிர்காலம்?

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சுயேச்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வியடைந்ததை அடுத்து, அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்தல் முடிவு வெளியான மறுநாளே, அவருக்கு வலது, இடது கைகளாக செயல்பட்ட ஜேசிடி பிரபாகர், புகழேந்தி விலகினர். இதனால், தற்போது தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ், “ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்ற கோரிக்கையை தீவிரமாக முன் வைக்க தொடங்கியிருக்கிறார்.
Similar News
News November 11, 2025
ஒரு மரணம்… நிலைகுலைந்து போன 8 பேரின் கனவுகள்!

டெல்லி குண்டுவெடிப்பு, பல குடும்பங்களை சிதறடித்துவிட்டது. தாய், சகோதரர், மனைவி, 4 குழந்தைகளின் கனவுகளை பூர்த்தி செய்து வந்த அசோக் என்பவரை இன்று அக்குடும்பம் இழந்துவிட்டது. பகலில் பஸ் கண்டக்டராக, இரவில் செக்யூரிட்டியாக ஓயாது உழைத்து கொண்டிருந்தவரின் உயிரை குண்டுவெடிப்பு பறித்துவிட்டது. லோகேஷ் என்ற நண்பரை அழைத்து வர சென்ற பயணம், அசோக்கின் இறுதி பயணமாகிவிட்டது. இந்த கண்ணீருக்கு யார் பதில் சொல்வது?
News November 11, 2025
விஜய் கட்சியின் சின்னம்.. நேரில் வழங்கினார்

தவெகவுக்கு பொதுச் சின்னம் கோரும் மனுவை டெல்லியில் உள்ள ECI தலைமை அலுவலகத்தில் CTR நிர்மல்குமார் வழங்கினார். அதில், ECI-ல் ஏற்கெனவே உள்ள ஆட்டோ, விசில், கிரிக்கெட் பேட், சாம்பியன் கோப்பை, கப்பல் ஆகிய சின்னங்களும், தவெக நிர்வாகிகளின் பரிந்துரைகள் மூலம் புதிதாக வரையப்பட்ட 5 சின்னங்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவுக்கு உங்க சாய்ஸ் எந்த சின்னம்? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 11, 2025
2026-க்கு பின் TTV அரசியலுக்கு முடிவு: ஆர்.பி.உதயகுமார்

அதிமுக ஒன்றிணைவது என்பது முடிந்துபோன ஒன்று; இனி அதற்கு சாத்தியமே இல்லை என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஜெ., இருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு டிடிவி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். ஜெ., வகித்த பதவிக்கு ஆசைப்பட்டு துரோகம் செய்ததால், இந்த பிறவி அல்ல எந்த பிறவி எடுத்தாலும் அவர் தப்ப முடியாது. 2026 தேர்தலுக்கு பிறகு டிடிவியின் அரசியல் பயணம் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.


