News March 19, 2025
அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் OPS தரப்பு எம்எல்ஏக்கள்

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது முதல், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட MLAக்கள், சட்டசபையில் தனியே செயல்பட்டு வந்தனர். அவர்கள் அதிமுக MLAக்களுடன் இதுவரை சபையில் பேசாத நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இன்று அவைக்கு வந்த வைத்திலிங்கத்திடம், அதிமுக MLAக்கள் சகஜமாக பேசினார்கள். அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா? கமெண்ட் பண்ணுங்க…
Similar News
News July 7, 2025
பணத்தை மிச்சப்படுத்தும் 50:30:20 ரூல்!

பணத்தை ஓடி ஓடி சம்பாதிப்பதை போல, சேமிப்பதிலும் கவனம் வேண்டும். உங்களின் வருமானத்தை 50:30:20 விதிப்படி ஒதுக்குவது நல்லது *50% அத்தியாவசிய தேவைகளுக்கு *30% தேவைகளுக்கும், சுற்றுப்பயணங்களுக்கும் *20% சேமிப்புகளுக்கு *ஒரு பெஸ்ட் ஃப்ரீ அட்வைஸ், ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றினால், ஒரு 24 மணி நேரம் காத்திருங்கள். பிறகு யோசியுங்கள் அது தேவையா என்று, உங்களுக்கு பதில் கிடைக்கும்.
News July 7, 2025
கன்னடத்தில் அறிமுகமாகும் அனிருத்

மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துவரும் படம் ‘டாக்ஸிக்’. இந்நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு, படத்திற்காக யாஷின் பிறந்தநாள் டீசரில் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். ஆனால், சில காரணங்களுக்காக அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இதன்மூலம் கன்னட திரையுலகில் தடம் பதிக்கிறார் அனிருத். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 19-ல் ரிலீஸாகவுள்ளது.
News July 7, 2025
மகளிர் உரிமைத்தொகை: வீடு வீடாக விண்ணப்பம்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல் முகாமை வரும் 15-ம் தேதி சிதம்பரத்தில் CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனிடையே, இன்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கவுள்ளது. இப்பணி 3 மாதங்கள் நடைபெறும் எனவும் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. மேலும், இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.